சட்டமன்ற தேர்தல்: உங்களின் வாக்குச்சாவடியை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என இந்த முறை கோடை வெயிலை விட தேர்தல் களம் இன்னும் அதிகமாக சூடு பிடித்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

சட்டமன்ற தேர்தல்: உங்களின் வாக்குச்சாவடியை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

தேர்தலில் வாக்களிக்க ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தங்களின் வாக்குச்சாவடியை எளிதாக ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. எனவே உங்களின் வாக்குச்சாவடி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை https://voters.eci.gov.in/, https://electoralsearch.eci.gov.in/ , ஆகிய இணைய தளங்கள் மூலம் எளிதாக அறியலாம்.

ECINET, Votershelpline, Sweetha ஆகிய மொபைல் செயலிகள் மூலமும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அவசியம் இல்லை என்றால் 1950 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் ஸ்மார்ட் போன், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாக்குப்பதிவுக்கு செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கியுள்ள போட்டோவுடன் கூடிய கணக்குப்புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள ஆவணங்களில் எதாவது ஒன்றை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.

வாக்களிக்க செல்வோருக்கு ஏற்கனவே பூத் ஸ்லிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் கியூ ஆர் கோடு வசதி உள்ளது. இதை பயன்படுத்தி தங்கள் வாக்குச்சாவடி, பாகம் எண், வரிசை எண் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். பூத் சிலிப் பெறாதவர்கள் ஆன்லைனில் கூட அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பாகம் எண், வரிசை எண் இருக்கும். அதனை பிரிண்ட் எடுத்து கொண்டு வாக்களிக்கும் மையத்திற்கு செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+