தங்கத்தினை விரும்பாத பெண்ணும் இந்தியாவில் மிக மிக குறைவு. பெண்கள் மட்டும் அல்ல இன்றைய காலக்கட்டத்தில் தங்கத்தின் மீது ஆண்களுக்கும் அவ்வளவு பற்று உண்டு. அதனை வெறும் வார்த்தைகளால் உண்டு.
பெண்களுக்கு போட்டியாக இன்று ஆண்களும் நகை அணியும் கலாச்சாரம் என்பது, இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வரும் ஒன்று.
சொல்லப்போனால் ஆண்களோ பெண்களோ? அவரவர் அந்தஸ்தினை தீர்மானிக்கும் ஒன்றாக தங்கம் பார்க்கப்படுகிறது. பொதுவாக பலரும் பிறரின் பார்வை, தங்கள் மீது திரும்ப வைக்க நகைகளை வித விதமாக அணிவர். இல்லையெனில் தங்களது அஸ்தஸ்தினை காட்ட அணிந்து செல்வர்.
அவசரத் தேவைக்கு உதவும் ஆபத்பாந்தவன்
பொதுவாக இந்தியாவில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் நகை வாங்குகிறார்கள் என்றால், மறுபுறம் அது அவசர காலங்களில் உதவும் ஆபத்பாந்தவானாகவும் இருக்கும். பல நடுத்தர குடும்பங்களிலும், இன்று தங்கத்தினை வாங்குவதே தேவைப்படும்போது நகையாக ஆபரணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் தேவைப்படும்போது கடன் கொடுக்கும் வங்கியாகவும் பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் தூய தங்கம் விலை நிலவரம்?
தூய தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்டில் (தூய தங்கம் 24 கேரட்) ஜனவரியில் அதிகபட்சமாக 10 கிராமுக்கு 49,860 ரூபாயினை எட்டியது. இதே குறைந்தபட்சமாக 48,390 ரூபாயினை எட்டியது.
எனினும் அதிகபட்சமாக நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 54,330 ரூபாயினை எட்டியது. அதன் பிறகு குறையத் தொடங்கிய நிலையில் மிக குறைந்தபட்சமாக 10 கிராமுக்கு தூய தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாதத்தில் 47,800 ரூபாயினை எட்டியது. எனினும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு 10 கிராமுக்கு 50,000 ரூபாய்க்கு கீழாக சரிவினைக் காணவில்லை.
இதே டிசம்பர் மாதத்தில் தூய தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு இதுவரையில் அதிகபட்சமாக டிசம்பர் 14ல் 55,640 ரூபாயினையும் எட்டியது. இதே குறைந்தபட்சமாக டிசம்பர் 1 அன்று 54,050 ரூபாயாகவும் இருந்தது. இன்று அதன் விலை 55,040 ரூபாயாகவும் உள்ளது.
ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் தூய தங்கம் விலை குறைந்தபட்ச விலையில் இருந்து, தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது, 10 கிராமுக்கு 6250 ரூபாய் அதிகரித்து தான் காணப்படுகின்றது.
நடப்பு ஆண்டில் ஆபரண தங்கம் விலை?
ஆபரணத் தங்கத்தின் விலையானது ஜனவரி மாதம் 10 கிராமுக்கு 47,050 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், ஜனவரி முடிவில் 44,900 ரூபாயாக குறைந்தது. இந்த விலையானது மார்ச் மாதம் அதிகபட்சமாக 47,650 ரூபாயினை எட்டியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 47,800 ரூபாயினையும் எட்டியது. எனினும் இது டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 14 அன்று 51000 ரூபாயினை எட்டியது.
இதன் படி பார்த்தால் டிசம்பர் 14 நிலவரப்படி சவரன் தங்கம் விலை 40,800 ரூபாயாகும். இதே ஜனவரியில் 35,920 ரூபாயாகவும் இருந்தது. ஆக மொத்தத்தில் நடப்பு ஆண்டில் ஒரு வருடத்தில் சவரனுக்கு 4800 ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் என்ன?
சர்வதேச சந்தையினை பொருத்தவரையில் தங்கம் விலையானது, கடந்த மார்ச் மாதம் அதிகபட்சமாக 2078 .70 டாலர்களை எட்டியது. இது குறைந்தபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 1618.30 டாலர்களை எட்டியது. இது தற்போது 1794 டாலர்கள் என்ற லெவலிலும் காணப்படுகின்றது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது 1826.80 டாலர்கள் என்ற லெவலில் காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 32 டாலர்கள் சரிவில் தான் காணப்படுகின்றது.
தங்கம் வரலாறு என்ன?
கடந்த 1925ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 18.75 ரூபாயாகத் தான் இருந்துள்ளது. இதுவே இந்தியா சுதந்திரம் வாங்கிய போது கூட வெறும் 88.62 ரூபாயாகத் தான் இருந்துள்ளது. இதே 1979 வரையில் கூட 1000 ரூபாய்க்கு கீழ் தான் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. 1980ல் தான்1330 ரூபாய்க்கும், இதே 2007ம் வருடத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 2011ல் 26,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 2018ல் கூட தங்கம் விலை அதிகபட்சமாக 31,535 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் தான் வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் இறக்குமதி?
பொதுவாக தங்கம் இறக்குமதியானது இந்தியாவில் அதிகம் என்பதால், மத்திய அரசு இறக்குமதி வரியினை 12.5% ஆகவும், இதனுடன் ஜிஎஸ்டி விகிதம் 12.5% ஆகவும் உள்ளது. இது கடந்த 2011க்கு பிறகு 2022ம் நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகம் எனலாம். இதன் மதிப்பு 3440.9 பில்லியன் ரூபாயாகும். இது கடந்த 2011ல் 1847.42 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது. இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 35% அதிகமாகும்.
இனி எப்படியிருக்கும்?
சர்வதேச சந்தையில் ரஷ்யா - உக்ரைனுக்கு மத்தியில் நிலவி வரும் நெருக்கடியானது, தொடர்ந்து பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது உச்சத்தில் காணப்படுகிறது. இது இன்னும் சில காலத்திற்கு நீடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே பல நிபுணர்களும் எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications