year end story 2019: 2019ல் வரலாறு காணாத உச்சம் கண்ட தங்கத்தின் விலை.. இனி எப்படி இருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்களை பார்ப்பது மிக அரிது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் பணக்கார மக்களாகட்டும், ஏழை மக்களாகட்டும், அவரவர் தகுதிற்கேற்ப ஒரு பொட்டு தங்கமேனும் வாங்கி அணிவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.

பெரும் பணக்காரர்கள் அதை ஆடம்பரத்திற்கும் அழகுக்கும் வாங்குகிறார்கள் என்றால், அடித்தட்டு மக்கள் அதை கஷ்டமான நேரத்தில் அடகு வைத்து பணம் வாங்குவதற்கும், பின்னர் திரும்ப பெற்று கொள்வதாலேயே சிலர் அதில் முதலீடு செய்கின்றனர்.

ஒரு புறம் தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதையடுத்து, அரசு இறக்குமதியை குறைக்க வரியை உயர்த்தியது. இதனால் தங்கம் இறக்குமதி சற்று குறைந்தாலும், மறுபுறம் தங்கம் கடத்தல் அதிகளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2019ம் வருடம் முடியவிருக்கும் நிலையில் இந்த ஆண்டில் தங்கம் விலை எப்படி இருந்தது. உச்சம் என்ன? குறைந்த பட்ச விலை எவ்வளவு? என்ன காரணம் இதுபோன்ற பலவற்றைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

தீரா ஆர்வம்

தீரா ஆர்வம்

அன்று முதல் இன்று வரை நம் இந்திய பெண்களின், குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களின் தங்கத்தின் மீதான மோகம் எவ்வளவு என்றும் சொல்ல முடியாது அளவுக்கு இருந்துள்ளது. அந்தளவுக்கு தங்கத்தின் மீது தீரா மோகம் என்றே கூறலாம். அதிலும் நாம் பாட்டி மார்களும் மூதாதையர்களும் கூறும்போது, அந்த காலத்தில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டது என்று கூற கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மைதான் கடந்த 1925ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 18.75 ரூபாயாகத் தான் இருந்துள்ளது. இதுவே இந்தியா சுதந்திரம் வாங்கிய போது கூட வெறும் 88.62 ரூபாயாகத் தான் இருந்துள்ளது.

வரலாறு காணாத விலை

வரலாறு காணாத விலை

இந்த நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1979 வரையில் கூட 1000 ரூபாய்க்கு கீழ் தான் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. 1980ல் தான்1330 ரூபாய்க்கும், இதே 2007ம் வருடத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 2011ல் 26,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 2018ல் கூட தங்கம் விலை அதிகபட்சமாக 31,535 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் தான் வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தங்கம் விலை எப்படி?

நடப்பு ஆண்டில் தங்கம் விலை எப்படி?

ஜனவரி 1 அன்று 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது 30,170 ரூபாயாக இருந்தது. இந்த நிலையின் பிப்ரவரியில் இது 32,300 ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே மார்ச், ஏப்ரல், மே-வில் எவ்வித பெரிய மாற்றம் இன்றி 30,000 முதல் - 31,000 ரூபாய்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது. எனினும், ஜூன் மாதத்தில் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கத்தின் விலையானது செப்டம்பர் மாதத்தில் 37,680 ரூபாய் வரை சென்றது. இதே 24 கேரட் (10 கிராம்) தங்கத்தின் விலையானது 41,070 ரூபாயாகவும் வர்த்தகமாகி வந்தது. இப்படியாக வருடத்திற்கு வருடம் ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலை, இந்த வருடமும் ஏற்றம் கண்டிருந்தாலும், இவ்வளவு ஏற்றம் கண்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

வழக்கமாக வருடத்திற்கு வருடம் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தாலும், மத்திய அரசானது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க தங்கம் இறக்குமதியை கட்டுக்குள் கொண்டு வர தங்கம் இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில் பாஜக அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 2.5 சதவிகிதம் உயர்த்துவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார், ஆக மொத்தம் ஏற்கனவே இருந்த 10 சதவிகிதத்துடன் சேர்த்து, 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக தங்கம் இறக்குமதியும் சற்று குறைந்துள்ளதும் கூட கண் கூடாக பார்க்க முடிகிறது.

இறக்குமதி எவ்வளவு?

இறக்குமதி எவ்வளவு?

தங்கம் இறக்குமதியில் உலக நாடுகளில் மிகப் பெரிய நாடாகத் திகழும் இந்தியா, தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிகளவு தங்கத்தைத் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. அதிலும் இதில் பெரும் பங்கு நகைகள் தயாரிப்புக்காகவே தங்கம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் தங்கத்தின் இறக்குமதியானது தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாகவே சரிந்து வருகிறது. அதிலும் கடந்த நவம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் குறைந்துள்ளாதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிலும் கடந்த நவம்பரில் 56.1 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசின் நடவடிக்கை மட்டும் காரணம் அல்ல?

அரசின் நடவடிக்கை மட்டும் காரணம் அல்ல?

ஒரு புறம் மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரித்ததால் இறக்குமதி குறைந்ததாக கூறப்படுகிறது. எனினும் தேவை குறைவு, விலை அதிகரிப்பு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான ஈடுபாடு காரணமாக விலையேற்றம், இதெல்லாவற்றையும் விட அமெரிக்கா சீனாவுக்கு இடையில் நிலவி வந்த வர்த்தக போரால், சர்வதேச சந்தைகள் அவ்வளவு பாதுகாப்பான முதலீடாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாக அவர்களின் கவனம் தங்கத்தின் மீதே திரும்பியது. இதனாலேயே சர்வதேச சந்தையில் கடந்த செப்டம்பரில் உச்சத்தை தொட்டது.

உலக சந்தையில் தங்கம் விலை

உலக சந்தையில் தங்கம் விலை

நடப்பு நிதியாண்டில் சர்வதேச அளவில் நிலவி வந்த சில பிரச்சனைகளால் தங்கம் தான் சிறந்த முதலீடாக கருதப்பட்டது. இதனால் நடப்பு ஆண்டில் அவுன்ஸூக்கு 1270 டாலரிலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் அவுன்ஸூக்கு 1566 டாலர் வரை சென்றது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது 1480.75 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியா கமாடிட்டி சந்தையில் விலை?

இந்தியா கமாடிட்டி சந்தையில் விலை?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் அதிகரித்த நிலையில், அதன் எதிரொலியானது இந்திய சந்தைகளிலும் காணப்பட்டது. நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலையானது எம்.சி.எம்க்ஸ் சந்தையில் அதிகபட்சமாக கடந்த செப்டம்பரில் 39,699 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே குறைந்தபட்சமாக 31,101 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இது வரையிலான சராசரி விலையானது 34,744 ரூபாயாகவும், ஆக மொத்தம் 20 சதவிகித மாற்றத்துடனும் சந்தை உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலையானது 37,863 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

ஜனவரி 1 அன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது 24,136 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், இது கடந்த செப்டம்பரில் அதிகபட்சமாக 30,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் (22 கேரட்) ஒரு சவ்பரன் 28,984 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது. என்னதான் விலை அதிகரித்தாலும் தங்கத்தின் விலை உபயோகத்தை குறைக்க முடியாது என்பது சிறந்த சாட்சி தான் இன்றளவிலும் தங்க நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்.

உபயோகம் குறைந்துள்ளது

உபயோகம் குறைந்துள்ளது

என்ன தான் தங்கத்தின் இறக்குமதி குறைக்கப்பட்டாலும், வரி அதிகரிக்கப்பட்டாலும் தங்கத்தின் மீதான ஈடுபாடு குறையவில்லை என்றாலும், அதிகபட்ச விலையானது ஒரு தடையாகவே கருதப்பட்டது. இதனால் தேவை குறைந்ததாகவே கருதப்படுகிறது. இது குறித்து உலக தங்க கவுன்சில் ஒரு அறிக்கையில் தங்கத்தின் தேவையானது கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

கிராமப்புறங்கள் பாதிப்பு

கிராமப்புறங்கள் பாதிப்பு

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கன மழையால் சில இடங்களில் தங்கத்தின் தேவையானது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்க உபயோகத்தில் மூன்றில் ஒரு பங்கு கிராமப்புறங்களில் உபயோகப்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், நடப்பு ஆண்டில் பருத்தி, நெல், என பல பயிர்கள் மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாலும், இதனால் கிராமப்புறங்களில் வருவாய் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்களின் முதன்மை முதலீடான தங்கம், வாங்கும் அளவும் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் வரவிருக்கும் ஆண்டுகளில் இது அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

நடப்பு ஆண்டில் தான் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் அதற்கேற்றவாறு பல காரணிகள் இருந்தன. எனினும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட அமெரிக்க சீனா வர்த்தகப் போர் தான். இது தற்போது முதல் கட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இது முழுமையான நிலையை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையலாம். ஆக இனி பெரிய அளவில் தங்கத்தில் ஏற்றம் இருக்காது என்றும் நம்பலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to performed gold price in 2019?

Gold priced this year approximately increased 22 percent, due to America china’s trade war and Indian’s import duty hiked. So over gold prices this up movement in this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X