டெல்லி: இந்திய சந்தையில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புது புது மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாரம்பரியமாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்கள் , கேஸ் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடிய ஹைபிரிட் கார்களுக்கு இடையே இந்திய சந்தையில் தற்போது போட்டி அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை 2023 ஆம் ஆண்டில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மின்சார கார்களின் விற்பனை 95, 859 ஆக இருந்தது இது 2024ஆம் ஆண்டில் 1,13,441 என அதிகரித்தது. இதுவே 2023 ஆம் ஆண்டில் ஹைபிரிட் கார்களின் விற்பனை 87, 519 ஆக இருந்து 2024 ஆம் ஆண்டில் 1,03,252 என அதிகரித்துள்ளது. ஓராண்டு காலத்தில் விற்பனை அதிகரித்து இருந்தாலும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஹைபிரிட் கார்களின் விற்பனை குறைவாக தான் இருக்கிறது.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் ஹைபிரிட் மற்றும் மின்சார கார்களுக்கு இடையிலான போட்டியில் மின்சார கார்களுக்கே வெற்றி கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி பேட்டரி எலக்ட்ரிக் காரான e Vitaraஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் Creta எலக்ட்ரிக் காரையும், மகேந்திரா நிறுவனம் BE 6 , XEV 9e ஆகிய கார்களையும் அறிமுகம் செய்துவிட்டது.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கூடிய விரைவில் Cyberster காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ ,ஆடி, வால்வோ ஆகிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் தங்களுடைய மின்சார கார்களை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் தற்போதைக்கு மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Tiago, Punch, Nexon, Curvv உள்ளிட்ட கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்தியாவில் ஹைபிரிட் காரர்களுடன் ஒப்பிடும்போது மின்சார கார்களின் விற்பனை சற்றே அதிகரிக்கும் என கணிப்பதாக JATO டைனமிக்ஸ் என்ற அமைப்பின் இந்திய தலைவர் ரவி பாட்டியா தெரிவித்துள்ளார்.
ஹைபிரிட் பிரிவினை பொருத்தவரை மாருதி சுசுகி Grand Vitara, Invicto, டொயோட்டாவின் Urban Cruiser Hyryder, ஆகியவை இந்தியா சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது தங்களுடைய கவனத்தை பெருமளவில் மின்சார வாகனங்களின் மீதே செலுத்துகின்றன என்பதால் ஹைபிரிட் கார்கள் விற்பனை குறையும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்றால் ஹைபிரிட் கார்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அரசு ஹைபிரிட் கார்களின் விற்பனையை ஊக்குவிக்க கூட வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பன உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தால் தான் அதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications