இந்தியா முழுக்க, தங்கம் மீதான காதலை எளிதில் பார்க்க முடியும். அதிகம் சம்பாதிக்காத சாதாரண குடும்பத்தவர்கள் கையில் கூட, ஒரு சின்ன தங்க மோதிரத்தையோ அல்லது ஒரு மெல்லிய செயினையோ கழுத்தில் பார்க்கலாம்.
அந்த அளவுக்கு தங்கம் நம் சமூகத்தோடும், நம் உணர்வுகளோடும் கலந்துவிட்டது.
சரி இப்போது தங்கத்தை வாங்கினால் பவுனுக்கு சுமாராக 28,000 ரூபாய் லாபம் பார்க்கலாம். எப்படி?
இன்று தங்கம் விலை
சென்னையில், இன்று ஏப்ரல் 24, 2020 (வெள்ளிக்கிழமை) 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,810 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக கிராமுக்கு 4,581 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. இதே விலைக்கு (4,581) ஒரு பவுன் தங்கம் வாங்குகிறோம் என்றால் 36,648 ரூபாய் செலவாகும்.
கணிப்பு
பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அனலிஸ்டுகள், அடுத்த 2021-ம் ஆண்டு முடிவுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமாராக 3,000 அமெரிக்க டாலர் வரை தொடலாம் எனக் கணித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில், பவுனுக்கு, கிராமுக்கு எவ்வளவு அதிகரிக்கும்?
இந்திய மதிப்பு
ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 28.35 கிராம். ஆக $ 3,000 / 28.35 = 105.82 டாலர் வருகிறது. இது ஒரு கிராம் தங்கத்தின் விலை. ஆக 105.82 * 8 கிராம் = 846.56 டாலர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் உச்சம் 76.91. ஆக 846.56 * 76.91 = 65,108 ரூபாய் வருகிறது. கிராமுக்கு 8,138 ரூபாய் தொடும் என்கிறது பேங்க் ஆஃப் அமெரிக்கா.
ஜிம் ராஜர்ஸ்
அடேங்கப்பா, ஒரு கிராம் தங்கம் 8,138 ரூபாயா? இப்படி வேறு யாராவது தங்கம் விலை ஏறும் எனச் சொல்லி இருக்கிறார்களா? என்றால் சொல்லி இருக்கிறார்கள். இந்த கொரோனா வைரஸ் பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வருவதற்குள், தங்கத்தின் விலை, ஒரு நல்ல உச்சத்தை எட்டிப் பிடிக்கும் என, உலகின் மிக முக்கிய கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் சில வாரங்களுக்கு முன்பு சொல்லி இருந்ததும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கணக்கு
ஆக இப்போது, 36,648 ரூபாய்க்கு நாம் ஒரு பவுன் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டால், அடுத்த 20 மாதங்களுக்குள் (2020-ல் இன்னும் எட்டு மாதம், 2021-ல் 12 மாதம்) தங்கம் ஒரு பவுன் விலை 65,108 ரூபாயைத் தொடலாம். பிறகு என்ன, வேண்டும் என்றால் தங்கத்தை விற்று காசாக்கிக் கொள்ளுங்கள். லட்டு போல 28,460 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இதற்கு முன்
பேங்க் பஜார் கொடுத்து இருக்கும் தங்க விலை தகவல்கள் படி,
1. 2000-மாவது ஆண்டில் 4,400 ரூபாயாக இருந்த 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, 2006-ல் 8,400 ரூபாய் ஆனது.
2. 2006-ல் 8,400 ரூபாயாக இருந்த 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 2010-ல் 18,500 ரூபாயானது.
3. 2010-ல் 18,500 ரூபாயாக இருந்த 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, 2019-ல் 35,220 ரூபாய் ஆனதாகச் சொல்கிறது பேங்க் பஜார்.
இப்போது
இப்படி 3 முறை வரலாற்றில் தங்கம் விலை டபுள் ஆனதைச் சொல்லி இருக்கிறோம். இப்படி இந்த முறையும், கிட்டத்தட்ட தங்கம் விலை டபுள் ஆகலாம் எனச் சொல்கிறது பேங்க் ஆஃப் அமெரிக்கா. அப்படி விலை ஏற்றம் காண்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதே. ஆக மக்களே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications