AI பயன்படுத்தி ரூ.70 கோடியை மிச்சப்படுத்திய ஐஐடி மெட்ராஸ் இன்ஜினியர்…!! வியந்த ஐரோப்பியர்கள்..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐஐடி மெட்ராஸ் பொறியாளர் ஒருவர், 70 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி ஐரோப்பிய நாடுகளையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் அதனால் கிடைக்கும் நன்மைகள் பெரியதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக மாறியுள்ளது.

ஐரோப்பாவில் செயல்படும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் தினசரி சுமார் 50,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கே முறையான நுழைவுச்சீட்டு இல்லாமல் பலர் உள்ளே நுழைவது பெரிய தலைவலியாக இருந்தது. அதை கண்காணிக்க அந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கி வந்தன.

AI பயன்படுத்தி ரூ.70 கோடியை மிச்சப்படுத்திய ஐஐடி மெட்ராஸ் இன்ஜினியர்…!! வியந்த ஐரோப்பியர்கள்..!!

ஆனாலும், ஆட்கள் ஊடுருவுவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் பூங்கா நிர்வாகம் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண ஐஐடி மெட்ராஸ் பொறியாளரும், 'Scaler' நிறுவனத்தின் AI மற்றும் FDE தலைவருமான சிவாங்க் அகர்வாலை அணுகியுள்ளது. அவர் அதற்கு தீர்வு கண்டு கொடுத்து பெரிய தொகையையும் சேமித்து தந்துள்ளார்.

வெளிப்படையாக பார்த்தால், டிக்கெட் இல்லாமல் உள்ளே நுழைபவர்களைப் பிடிப்பதுதான் பிரச்சினை என தோன்றும் ஆனால், அவர் களத்தில் இறங்கி ஆய்வு செய்தபோதுதான் உண்மையான சவாலே தெரியவந்ததாம். தினசரி பதிவாகும் 12,000 மணி நேர சிசிடிவி காட்சிகளை மனிதர்களால் அமர்ந்து முழுமையாக கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்துள்ளது என கூறியுள்ளார்.

Also Read

சிறந்த கேமராக்களை மாற்றுவது அல்லது கூடுதல் பாதுகாப்பு ஊழியர்களை நியமிப்பது இதற்கு தீர்வாக இருக்காது என்பதை அவர் உணர்ந்தார். இந்த சிசிடிவி காட்சிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் தீர்வு கானாமல் இருப்பதே உண்மையான பிரச்சினையாக இருந்தது என்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்த சிக்கலை தீர்க்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப முறையானது, பூங்காவின் கண்காணிப்பு செலவை 96% அளவுக்கு குறைக்க உதவியதாம். இதன் மூலம் அந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் சேமிக்க முடிந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஆச்சரியம் என்னவென்றால், இந்த மொத்தத் தீர்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கு வெறும் 20% மட்டுமே ஆகும். மீதமுள்ள 80% முழுக்க முழுக்க சரியான செயல்முறை மாற்றங்கள் மற்றும் மனித மேலாண்மையின் மூலமே சாத்தியமானது என அவர் கூறியுள்ளார்.

Recommended For You

கண்காணிப்பு கேமரா தரவுகளை ஆய்வு செய்து எங்கே பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என ஏஐ மூலம் தீர்வு கண்டு பிரச்சினையை சரி செய்ததாக கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஏஐ தயாரிப்புகளை உருவாக்குகின்றன இவை நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக இருக்கின்றனவா என்பதுதான் சிக்கல் என கூறும் அதர்வால் , ஏஐ தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுடைய தயாரிப்புகள் உண்மையான அன்றாட பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+