ரூபாய் மதிப்பு சரிவையும், அன்னிய செலாவணி இருப்பையும் பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மோடி மே மாதம் இந்திய மக்களை அடுத்த ஒரு வருடத்திற்கும் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியது மிகப்பெரிய அளவில் பலன் அளித்துள்ளது.
2026-27ஆம் நிதியாண்டில் ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்திய மக்கள் தங்கம் வாங்குவதில் எடுத்த முக்கியமான முடிவுகள் மூலம் நாட்டின் தங்க இறக்குமதி 40 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

இதன் மூலம் கடந்த 7 மாத காலத்தில் தங்கத்திற்காக இந்தியா 24.7 பில்லியன் டாலர் அளவிலான தொகையை மட்டுமே செலவு செய்துள்ளது என வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைப்பான CTI-யின் தலைவர் பிர்ஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தங்க இறக்குமதி குறித்த பிர்ஜேஷ் கோயல் பேசுகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் காலத்தில் இந்தியாவில் 41.24 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இவ்வாண்டில் இதே காலகட்டத்தில் 24.7 பில்லியன் டாலர் அளவிலான தங்கத்தை வாங்கியுள்ளது, கிட்டத்தட்ட 16.47 பில்லியன் டாலர் குறைவாக செலவிடப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த நிதியாண்டில் மொத்தம் 72 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த 30-40 பில்லியன் டாலர் அளவிலான தங்கத்தை மட்டுமே வாங்கக் கூடிய நிலை உருவாகும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிர்ஜேஷ் கோயல் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்குப் பின்பு தங்க இறக்குமதி வேகமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் வெடித்த நாளில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது, இதேவேளையில் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறிய காரணத்தால் ரூபாய் மதிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மே மாதம் பிரதமர் தங்கம் வாங்குவதைக் குறைக்கவும், தவிர்க்கவும் கூறிய பின்பும் நகைக் கடைகளில் கூட்டம் குறைக்கவில்லை. காரணம், மக்கள் புதிய தங்க நகைகளை தங்களுடைய பழைய தங்க நகைகளை வைத்து வாங்கினர், பல முன்னணி நகைக் கடைகளில் 60-70 சதவீத வர்த்தகம் பழைய தங்க நகைகள் வாயிலாகவே நடக்கிறது எனத் தெரிவித்தது.
இதற்குச் சான்று நகைக் கடைகளின் கடந்த காலாண்டின் நிதி முடிவுகளில் ஒவ்வொரு நிறுவனமும் அதிகப்படியான வருமானத்தைப் பெற்றுள்ளது. மக்கள் தங்கம் வாங்கவில்லையெனில் நகைக் கடைகளின் வருமானம் குறைந்திருக்கும்.
இதேபோல், தங்கம் விலை தற்போது குறைந்திருந்தாலும், அக்டோபர் மாதம் வரையில் அதிகமாக இருந்த காரணத்தால் பெரும் பகுதி மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தனர். இக்காலகட்டத்தில் தான் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை அதிகம் பயன்படுத்தி புதிய நகைகளை வாங்கினர். இதன் வாயிலாக இறக்குமதி குறைந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
