போலியாக ஆதார் கார்டு உருவாக்கும் நிறுவனம்! மக்களே உஷார்! நம்பி போனா நம்ம கதை கந்தல் தான்!

இன்றைய டிஜிட்டல் உலகில் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல சேவைகளுக்கு அடிப்படை விஷயமாக உள்ளன. இந்த அடையாளங்களை பாதுகாப்பதில் சவால்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் ஆதார் கார்டை வைத்து மோசடி, பான் கார்டு வைத்து மோசடி என இந்தியாவில் தனிநபரின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி அடையாளத் திருட்டு மற்றும் நிதி மோசடிகள் பெருமளவில் நடக்கின்றன. அது தொடர்பான செய்திகளும் சில காலமாக வெளியாவதைப் பார்த்து வருகிறோம்.

என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி வசதியானதாகத் தோன்றினாலும், அது தொடர்புடைய மோசடிகளும் சற்று அதிகரிக்கத் தான் செய்கிறது. தேவைப்படும் இடங்களிளெல்லாம் இ-ஆதார் மற்றும் இ-பான் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று அரசு கூறி இருந்தாலும் அதை டவுன்லோட் செய்வதற்கு சிலர் பிறரின் உதவியை நாடுகின்றனர்.

போலியாக ஆதார் கார்டு உருவாக்கும் நிறுவனம்! மக்களே உஷார்! நம்பி போனா நம்ம கதை கந்தல் தான்!

தாமாக டவுன்லோட் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனாலும் அப்படி செய்கையில் உள்நுழையும் இணையதளம் உண்மையானதா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம். உள்ளூரில் உள்ள கடைகள் மற்றும் சைபர் கஃபேக்கள் இடைத்தரகர்கள் போல செயல்பட்டு கேஒய்சி சேவைகளை பெற நினைப்பவர்களின் அடையாளங்களை திருடி நிதி மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

1800 போலி டொமைன்கள்: AI புலனாய்வு நிறுவனமான CloudSEK என்ற நிறுவனத்தின் விசாரணையில் "பிரின்ட்ஸ்டீல்" என்ற ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்களின் கேஒய்சி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அரசாங்க வலைதளங்களைப் போலவே ஆள்மாராட்டம் செய்ய 1800-க்கும் மேற்பட்ட போலி டொமைன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் பயன்படுத்தும் யுத்தியே அரசின் பொது சேவை மையங்களை போல செயல்படுவது தான்.

அவர்களுடைய இணையதளங்களில் மக்களிடம் தகவல்களை பெற்று, போலியாக ஆதார், பான் மற்றும் பர்த் சர்டிபிகேட்களை உருவாக்கி வழங்கி வந்துள்ளனர். இதைத்தான் பிரிண்ட்ஸ்டீல் செய்து வந்துள்ளது.

அரசாங்க இணையதளங்களின் டொமைன் பெயர்களைப் போலவே இருந்தால் பலருக்கு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதிகாரப்பூர்வ டொமைன் போலவே காட்சியளிப்பதால் பலர் டவுன்லோட், அப்டேட் போன்றவற்றை செய்து, தங்களுக்கு தெரியாமலேயே மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த போலி இணையதளங்கள் மூலம் ஆதார் அட்டை பதிவிறக்கம், பான் கார்டு புதுப்பித்தல், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு சேவைகள் வழங்குவது போல் செயல்படுகிறார்கள். அரசாங்கத்தின் பாதுகாப்பு அம்சங்களை மீறி, போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இதுவரை 167,000-க்கும் அதிகமான போலி ஆவணங்களை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி மூலம் குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளனர்.

மோசடி எவ்வாறு செயல்படுகிறது?:

போலி இணையதளங்கள்: மோசடி செய்பவர்கள் அரசாங்க சேவைகளைப் போல தோற்றமளிக்கும் இணையதளங்களை அமைத்து, பயனர்களை தங்கள் விவரங்களை வழங்கும்படி ஏமாற்றுகிறார்கள்.

டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி மோசடி: முன்பே உருவாக்கப்பட்ட டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி, ஆதார், பான் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் உட்பட போலியான ஆவணங்களை இந்த தளம் உடனடியாக உருவாக்குகிறது.

போலி QR குறியீடுகள்: நம்பகத்தன்மையை அதிகரிக்க, இந்த ஆவணங்களில் மோசடியான தளங்களுக்கு இணைக்கும் QR குறியீடுகள் உள்ளன.

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை புதிதாக உருவாக்கும் அளவிற்கு இன்றைய மோசடிகள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்னும் இது போன்ற 600-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் செயல்பாட்டில் தான் உள்ளன. பீகாரில் 55.9%, உத்தர பிரதேசத்தில் 22.6% போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 156,000-திற்கும் அதிகமான போலி பிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் மூலம் வெளிப்படும் போலி KYC ஆவணங்களின் தயாரிப்பும், அதனால் ஏற்படும் மோசடிகளும், இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்புக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளன. சாதாரண மக்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தி, நிதி மற்றும் அடையாள திருட்டுகளில் ஈடுபடும் இந்த நெட்வொர்க்கை உடனடியாக கண்டறிந்து ஒடுக்க வேண்டியது அவசியம். அரசாங்கம், சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து செயல்படுவதன் மூலமே இந்த ஆபத்தை எதிர்கொள்ள முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+