ஐடி நிறுவனங்களுக்கு பெரிதாக ஊழியர்கள் தேவையில்லை: நாஸ்காம் சொன்ன தகவலால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இந்திய ஐடி நிறுவனங்கள் செயல்படும் விதத்தையே மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இனி அதிகளவில் ஊழியர்களே தேவைப்பட மாட்டார்கள் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், இனி அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்தாமலேயே ஐடி நிறுவனங்களால் பெரிய பிராஜெக்டுகளை கையாளவும், வருவாயை அதிகரிக்கவும் முடியும் என கூறியுள்ளது. 'AI Will Reshape, Not Replace, IT Services and BPM Businesses in India' என்ற பெயரில் ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள நாஸ்காம், ஏஐ வருகையால் ஐடியில் வேலைவாய்ப்புகளில் ஏற்படவுள்ள தாக்கங்களை விளக்கியுள்ளது.

ஐடி நிறுவனங்களுக்கு பெரிதாக ஊழியர்கள் தேவையில்லை: நாஸ்காம் சொன்ன தகவலால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி..!!

பல ஆண்டுகளாக, ஐடி நிறுவனங்கள் அதிக பிராஜெக்டுகளை எடுக்க வேண்டுமென்றால் ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறி வருகிறது என கூறியுள்ளது. முன்பு மனிதர்களின் தலையீடு தேவைப்பட்ட பல பணிகளை ஏஐ கருவிகள் செய்வதால், ஊழியர்களை பெருமளவில் சேர்க்காமலேயே ஐடி நிறுவனங்களால் வருவாய் வளர்ச்சியை அடைய முடியும் என கூறியுள்ளது.

உதாரணமாக மென்பொருள் நவீனமயமாக்கல் ணிகளை இப்போது குறைந்த செலவிலும், குறைந்த நேரத்திலும் நிறுவனங்களால் முடிக்க முடிகிறது என சுட்டிக்காட்டியுள்ளது. ஆட்டோமேஷன் காரணமாக சில வழக்கமான சேவைகளில் குறைவான ஊழியர்களே தேவைப்படுகின்றனர் என கூறியுள்ளது.

Also Read

எனவே ஐடி துறையில் , கோடிங் எழுதுவது, கோடிங் சரிபார்ப்பது, டெஸ்டிங் போன்ற பணிகளில் அதிகமாக ஏஐ கருவிகள் பயன்படுத்தப்படுவதால், இந்த பணிகளோடு தொடர்புடைய தொடக்க நிலை பணியிடங்கள் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரித்துள்ளது.

ஒருபுறம் பாரம்பரிய சேவைகளில் அழுத்தம் இருந்தாலும், மறுபுறம் புதிய துறைகளில் தேவை அதிகரித்து வருகிறது என கூறியுள்ளது. ஏஐ உள்கட்டமைப்பு அமைத்தல், சைபர் செக்யூரிட்டி அபாயங்களை கையாளுதல், தானியங்கி செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தேவை, ஏனவே இதில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்க் வேலைவாய்ப்பு நிச்சயம் என கூறியுள்ளது.

Recommended For You

மேலும் Intelligent business operations மற்றும் AI governance ஆகியவற்றையும் நாஸ்காம் முக்கிய வளர்ச்சி பிரிவுகளாக குறிப்பிட்டுள்ளது. தொழில்நுட்பம் எவ்வளவு தானியங்கியாக மாறினாலும், வாடிக்கையாளரின் தொழிலை புரிந்துகொள்வது .. சிக்கலான செயல்பாடுகளை கையாள்வது போன்றவற்றுக்கு மனித அனுபவம் மிக முக்கியம் என கூறியுள்ளது.

தற்போதைக்கு மென்பொருள் உருவாக்க செலவு குறைவதால், ஐடி நிறுவனங்களால் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும், அதிக வருமானம் பார்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய ஐடி சேவைகள் மற்றும் BPM துறைகள் தற்போது குறுகிய கால மறுசீரமைப்பு கட்டத்தில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி மிதமாக இருக்கலாம் என்றும், வேலைவாய்ப்புகள் படிப்படியாக உயர் மதிப்புள்ள சேவைகளை நோக்கி நகரும் என்றும் நாஸ்காம் கணித்துள்ளது. அதாவது நுழைவு நிலை வேலைகள் நெருக்கடியை சந்திக்கலாம் என்பதால் ஏஐ பிரிவில் நிபுணத்துவம் பெறுவது வேலைவாய்ப்பு பெற உதவும் என கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+