Gold: 30% வீழ்ச்சியிலும் கிங் என நிரூபித்த தங்கம்..!! Nifty எல்லாம் பக்கத்துல கூட வர முடியல..!!

நடப்பாண்டில் தொடக்கத்தில் வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை ஆண்டு இறுதியில் வரலாற்று வீழ்ச்சியில் இருக்கிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.34 லட்சத்தை தொட்டது. ஆனால் இன்று ஒரு சவரன் தங்கம் விலை 93,760 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு சுமார் 40,000 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 30% வீழ்ச்சி அடைந்துள்ளது. அப்படி இருந்தாலும் 5 ஆண்டு கால கணக்கீட்டில் பார்த்தால் பங்குச்சந்தைகளை விட தங்கம் தான் அதிக லாபம் தந்த முதலீடாக நிற்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 24 கேரட் தங்கம் முதலீட்டாளர்களுக்கு 190% வருமானத்தை வழங்கியுள்ளது, ஆனால் நிஃப்டி 50 குறியீடு 50% உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

Gold: 30% வீழ்ச்சியிலும் கிங் என நிரூபித்த தங்கம்..!! Nifty எல்லாம் பக்கத்துல கூட வர முடியல..!!

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை சுமார் 43,000 ரூபாயாக இருந்தது, அதுவே இன்றைய அதாவது 2026 நவம்பர் 29இல் 1,25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 190% உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 2.90 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும்.

இதே காலகட்டத்தில் நிஃப்டி 50 குறியீடு 50% உயர்வை மட்டுமே தந்துள்ளது. அப்படி பார்த்தால் 2021ஆம் ஆண்டு நவம்பரில் நிஃப்டி 50-இல் செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் முதலீடு இன்று 1.50 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். நிஃப்டி 50-இன் லாபத்தை விட தங்கம் தந்த வருமானம், கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். அதாவது ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் நிஃப்டியை விட தங்கம் 1.40 லட்சம் ரூபாய் கூடுதல் லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.

Also Read

தங்கம் நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபம் தரும் முதலீடு என்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் விலை எப்போதும் ஏற்றத்திலேயே இருக்காது அவ்வப்போது சரிவையும் சந்திக்கும் , இது போன்ற சமயங்களில் விலை குறையும் போதெல்லாம் வாங்கி வைப்பது என்ற உத்தியை பயன்படுத்தினால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தில் செய்த முதலீடு நல்ல லாபம் தருவதாக அமையும் என நிபுணர்க்ள் கூறுகின்றனர். இதற்கு கடந்த ஓராண்டு காலம் தங்கம் விலையும், கடந்த 5 ஆண்டு கால தங்கம் விலையும் சாட்சி என்கின்றனர்.

Recommended For You

நடப்பாண்டில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது என்பது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 42% அதிகரித்து இருந்ததாக தங்க கவுன்சில் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதே காலாண்டில் தங்கம் சார்ந்த எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் 211 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. எனவே விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் நிறுவன முதலீட்டாளர்களும் மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கத்தை சேர்த்து வருவது எதிர்காலத்தில் தங்கம் விலை ஏற்றமடையும் என்பதையே உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+