பூட்டான் அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, அந்நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு எவ்விதமான வரியும் இல்லாமல் தங்கத்தை வாங்கிச் செல்லலாம் என அறிவித்துள்ளது.
பொதுவாக வரி இல்லாமல் தங்கம் வாங்க வேண்டும் என்றால் துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என கூறப்பட்ட நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் இப்புதிய அறிவிப்பு வெளியிட்டு தங்கம் வாங்குவோரை குஷிப்படுத்தியுள்ளது.
அதுவும் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்து வரும் நேரத்தில் இத்தகையை அறிவிப்பு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்பது போல தான் உள்ளது.
வரியில்லா தங்கம்!
பிப்ரவரி 21 அன்று, பூட்டான் அரசின் புத்தாண்டு மற்றும் மன்னர் பிறந்தநாளை கொண்டாடும் விதத்திலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை பூட்டானின் அதிகாரப்பூர்வ நாளிதழ் டெய்லி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்!
இன்று இந்தியர்கள் தங்கம் வாங்க துபாய் வரை செல்கின்றனர். ஏனெனில் துபாயில் தங்கம் விலை, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு தான்.
அதனை மனதில் கொண்டு பூட்டான் அரசு அங்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் வரிகள் ஏதும் இல்லாமல் தங்கம் வாங்கி செல்ல அனுமதி அளித்துள்ளது.
இந்தியர்களின் பெருமையாகவும், சொத்தாகவும் கருதப்படும் தங்கத்திற்கு இப்படியொரு ஆஃபர் வந்தால் அது ஒரு ஜாக்பாட் தான்.
பூட்டானில் என்ன விலைக்கு தங்கம் வாங்கலாம்!
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55,630 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே பூட்டானில் 10 கிராம் பிடிஎன் (Bhutanese Ngultrum) 10 கிராம் தங்கம் 37,588.49 பூட்டானீஸ் நகல்ட்ரம் (BTN) ஆகும். ஒரு BTN தோராயமாக ஒரு இந்திய ரூபாய்க்கு சமம். அதாவது இந்தியர்கள் ரூ.37,588க்கு பூட்டானில் தங்கம் வாங்கலாம்.
ஆனா ஒரு கண்டிஷன்!
பூட்டானில் வரியில்லா தங்கம் வாங்குவதற்கு இந்தியர்கள் நிலையான வளர்ச்சிக் கட்டணமாக (SDF - sustainable development fees) ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை செலுத்த வேண்டும். இந்த SDF சுற்றுலா வரி 2022 ஆம் ஆண்டிலேயே பூடான் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் அந்நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா சான்றளிக்கப்பட்ட ஹோட்டலில் ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அமெரிக்க டாலர்கள் மூலம் தங்கத்தையும் வாங்கலாம்.
SDF வரி
இதன்படி இந்தியர்கள் ஒரு நாளைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை செலுத்த வேண்டும். மற்ற நாட்டவர்கள் 65 முதல் 200 டாலர்கள் வரை செலுத்த வேண்டும். இந்த SDF வரியை செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வரியில்லா தங்கத்தை வாங்க தகுதியுடையவர்கள்.
பூட்டானில் எங்கு வரியில்லா தங்கம் கிடைக்கும்!
இந்த வரியில்லா தங்கத்தை ஆடம்பர பொருட்கள் விற்கப்படும் வரியில்லா விற்பனை நிலையங்களில் (duty-free outlets) வாங்கலாம். மேலும் பூட்டானின் திம்பு அல்லது ஃபூன்ஷோலிங் (Phuentsholing or Thimphu) செல்லும் இந்தியர்கள் அங்குள்ள ஆடம்பர பொருட்கள் விற்கப்படும் விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மட்டுமே நோக்கம் என்பதால், பூட்டானின் வரியில்லாத விற்பனை நிலையங்களுக்கு இதனால் லாபம் ஏதுமில்லை.
எவ்வளவு தங்கம் வாங்கலாம்!
மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மத்திய வாரிய விதிகளின்படி, வெளிநாட்டில் இருந்து ஆண்கள் சுமார் ரூ.50,000 மற்றும் பெண்கள் அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இந்தியாவிற்கு வரியில்லாமல் கொண்டு வரலாம். அதற்கு மேல் கொண்டுவரப்படும் தங்கத்திற்கு சுங்க வரி செலுத்த வேண்டும்.
எல்லாம் ஒரே கணக்கு தான்!
இந்தியாவில் 10 கிராம் 24 காரட் தூயத் தங்கம் ரூ.55,000 முதல் ரூ.56,000 என வைத்துக்கொண்டால், நீங்கள் பூட்டானில் தங்கம் வாங்க நினைத்தால் இந்தக் கணக்கெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
முதலில் பூட்டான் செல்ல தேவைப்படும் தொகை, வரியில்லா தங்கம் வாங்க அங்கு ஓட்டலில் தங்கும் செலவு, மேலும் அரசு விதித்துள்ள SDF கட்டணம் இதெல்லாம் கணக்குப்போட்டு பார்த்தால் பட்ஜெட் எகிறிவிடும். அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் இந்தியாவில் கூடுதலாக ஒரு 10 கிராம் தங்கம் வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!



Click it and Unblock the Notifications