இந்த மாநிலத்தில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டை விட இவ்வளவு விலை குறைவா?

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் தங்கம் விலை மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சென்னையிலும், பெங்களூருவிலுமே மாற்றமாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு தங்கம் விற்கும் மாநிலம் எது என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம்.

தங்கத்தை நாம் 24 கேரட் தூய தங்கம், 22 கேரட், 18 கேரட் ஆபரண தங்கம் என பல வடிவங்களில் வாங்குகிறோம். இதில் 24 கேரட் தங்கம் கட்டியாகவே கிடைக்கும். 22 கேரட், 18 கேரட் ஆகியவை தான் நகையாக கிடைக்கும். பெரும்பாலான மக்கள் தங்கத்தை நகையாக வாங்குகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா தான் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யும் மாநிலமாக இருக்கிறது. கேரள மாநிலம் தங்கத்தின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. கேரள மக்கள் இயல்பாகவே அதிக தங்கம் வாங்கு கூடியவர்கள். தங்கம் நுகர்வு அதிகம் என்பதால் இங்கே தங்க நகை கடைகளும் அதிகமாக உள்ளன.

 இந்த மாநிலத்தில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டை விட இவ்வளவு விலை குறைவா?

சாதாரணமாக ஒரு திருமணத்திற்கு சென்றாலே தங்கத்தாலேயே பெண்கள் அலங்காரம் செய்திருப்பார்கள் அந்த அளவுக்கு அங்கே தங்கம் வாங்கும் போக்கும் அதிகம். இதனால் கேரளாவில் உள்ள பல முன்னணி நகை கடைகள் சர்வதேச சந்தையில் இருந்து நேரடியாக தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. அதுவும் இல்லாமல் கேரளாவில் துறைமுகங்கள் அதிகம். இதனால் இடைத்தரகர் கமிஷன் இல்லாமல் தங்க நகை விற்பனை நிறுவனங்களே தங்கத்தை இறக்குமதி செய்கின்றன.

Also Read

குறிப்பாக கொச்சின் துறைமுகம் அதிக தங்கம் இறக்குமதி செய்யும் இந்திய துறைமுகங்களில் ஒன்று. இதனால் துறைமுகத்தில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்து நகை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. இதனால் தான் இங்கே குறைந்த விலைக்கே தங்கம் கிடைக்கிறது.

 இந்த மாநிலத்தில் மட்டும் தங்கம் விலை குறைவாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டை விட இவ்வளவு விலை குறைவா?

ஏனெனில் ஒவ்வொரு நகரத்திலும் தங்கம் விற்பனை விலை தங்கம் இறக்குமதி, வரி, போக்குவரத்து செலவு ஆகியவற்றை கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது. போக்குவரத்து செலவு என்பதால் கேரளாவில் தங்கம் விலை குறைவாக உள்ளது. இன்றைய தினத்தை பொறுத்தவரை சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,150 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

அதே வேலையில் கேரளாவில் இன்றைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ,965 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது தமிழ்நாடுடன் ஒப்பிடும் போது கேரளாவில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 185 ரூபாய் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என பார்க்கும்போது கேரளாவில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,11,720 ரூபாய் அதாவது ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட 1480 ரூபாய் விலை குறைவாகும். அதே போல இந்தியாவின் மும்பை நகரிலும் கேரளா விலைக்கே தங்கம் கிடைக்கிறது. ஏனெனில் இங்கேயும் துறைமுகங்களில் தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

எனவே அதிக அளவில் தங்கம் வாங்க கூடியவர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கோ அல்லது மும்பை போன்ற நகரங்களுக்கோ சென்று தங்கம் வாங்கும் போது ஒரு கணிசமான அளவு சேமிக்க முடியும். ஆனால் இதில் உள்ள போக்குவரத்து செலவு, நகையை பாதுகாப்பாக கொண்டு வருவது உள்ளிட்ட சவால்களும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+