மக்களே உங்க பர்ஸை பத்திரமா பாத்துக்கோங்க..!! இந்தியப் பொருளாதாரத்தில் எச்சரிக்கை மணி..!

இந்திய மக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய பணவீக்க அலை வரப்போகிறது என்றால் என்ன செய்வீர்கள்..? இதற்கான எச்சரிக்கை மணி தான் தற்போது அடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 11.39 சதவீதமாக உள்ளது, இதேபோல் ரீடைல் பணவீக்கம் 5.54 சதவீதமாக உள்ளது. இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் கிட்டத்தட்ட 6 சதவீதம். அதாவது மொத்த விலை சந்தை, உற்பத்தி அளவிலான விலை மதிப்புக்கும், ரீடைல் சந்தை மதிப்புக்கும் மத்தியிலான வித்தியாசம் கிட்டத்தட்ட 6 சதவீதமாக உள்ளது.

மக்களே உங்க பர்ஸை பத்திரமா பாத்துக்கோங்க..!! இந்தியப் பொருளாதாரத்தில் எச்சரிக்கை மணி..!

நாட்டின் ரீடைல் பணவீக்கம் 3-4 சதவீதத்தில் இருந்து 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது மூலம் ஏற்பட்ட விலைவாசி உயர்வைத் தாங்க முடியாமல் தவிக்கும் போது இந்த 6 சதவீத விலை வித்தியாசத்தை கடத்தப்பட்டால் என்னாகும்..?

ரீடைல் பணவீக்கத்திற்கும், மொத்த விலை பணவீக்கத்திற்கும் மத்தியிலான 6 சதவீத வித்தியாசத்தை இன்னும் நுகர்வோர் தலையில் ஏற்றப்படாத நிலையில், இந்த விலை சுமையை யார் ஏற்கிறார்கள் என்ற கேள்வி தற்போது முக்கியமானதாக உள்ளது.

Also Read

உதாரணமாக இந்தியாவில் எரிபொருள் மற்றும் மின்சார விலை இந்த வருடம் சுமார்25.85 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க்-களில் மே மாதத்திற்குப் பின்பு மாறவில்லை, செப்டம்பர் மாதம் கூட கச்சா எண்ணெய் விலை 117 டாலர் வரையில் உயர்ந்தது.

2026ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 66 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெருமளவிலான விலை உயர்வின் தாக்கத்தை அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கிறது, ICRA வெளியிட்டுள்ள தரவுகள் படி செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளுக்கு 530 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு வருகிறது.

இந்த இழப்பு பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகிய அனைத்தின் வாயிலாக எதிரொலிக்கிறது. இதேபோல் மின்சார உற்பத்தி விலை உயர்வின் தாக்கத்தை மத்திய மாநில அரசுகளும், பகிர்மான நிறுவனங்களும் ஏற்றுக்கொள்கிறது.

இதை தொடர்ந்து உற்பத்தித் துறைக்கு வந்தால் இந்தியாவில் உற்பத்தி பொருட்களுக்கான மொத்த விலை பணவீக்கம் 9.76 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது கெமிக்கல், பிளாஸ்டிக், ரப்பர், உலோகம், டெக்ஸ்டைல் ஆகியவற்றின் மூலம் விலை உயர்வின் தாக்கத்தைக் கொடுத்துள்ளது.

Recommended For You

இந்தியாவில் பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் இந்த விலை உயர்வை இன்னும் நுகர்வோருக்கு கடத்தாத நிலையில், அடுத்த 2 காலாண்டில் நிறுவனங்களின் லாப அளவில் ஏற்படும் தாக்கம் மூலம் படிப்படியாக விலை உயர்வு கடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நாட்டின் நகரபுற, கிராமப்புற விலைவாசி உயர்விலும் பெரும் வித்தியாசம் உள்ளது. கிராமபுற பணவீக்கம் என்பது 6.08 சதவீதமாக இருக்கிறது, இதேபோல் நகரபுற பணவீக்கம் 4.88 சதவீதமாக உள்ளது.

தற்போது நாட்டின் மொத்த விலைவாசி உயர்வும் பெட்ரோல், டீசல், மின்சார விலை உயர்வைச் சார்ந்து தான் உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறையும் பட்சத்தில் இந்த விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

ஆனால் செலவுகளை சமாளிக்க நிறுவனங்கள் வாங்கி கடன், லாப அளவீடுகளில் ஏற்படும் சரிவு, சில்லறை விலை உயர்வின் மூலம் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை நாட்டில் அடுத்த சுற்று விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+