தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கம் என்றாலே கவர்ச்சிகரமான பாதுகாப்பான ஒரு முதலீடாகவே காணப்படுகிறது.

இதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமால், இந்த நெருக்கடியான நேரத்திலும் லாபம் தந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த முதலீடு.

இதற்கிடையில் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் சமீபத்திய நாட்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆக இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் மனதில் எழுந்துள்ள ஒரே விஷயம் தங்கத்தினை இப்போது வாங்கலாமா? இது சரியான நேரமா? என்பது தான் சரி வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

தேவை குறைவானாலும் விலை அதிகரிப்பு
 

தேவை குறைவானாலும் விலை அதிகரிப்பு

அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் செல்வ செழிப்பின் ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. புனிதமான ஒரு விலைமதிப்பற்ற உலோகமாக உள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரத்தில் மிக ஆழமாக பதிந்துள்ள ஒரு விலைமதிப்பற்ற உலோகமாக உள்ளது. இந்த நிலையில் நாட்டில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் தேவையானது சற்று குறைந்திருந்தாலும், தங்கத்தின் விலையானது, கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே அதிகரித்து வருகின்றது.

முதலீட்டு நோக்கில் தங்கம் தேவை

முதலீட்டு நோக்கில் தங்கம் தேவை

அதாவது பிசிகல் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தாலும், முதலீட்டு நோக்கில் தங்கத்திற்கான தேவை உலகம் முழுக்க அதிகரித்து காணப்படுகிறது. இதுவே தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை காண வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

இது தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நிதி நெருக்கடியின் போது, தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த சமயத்தில் பங்குகள் உள்ளிட்ட மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது ஏற்ற இறக்கம் குறைவு தான். ஆக தங்கம் முதலீட்டு நோக்கங்களுக்காக வாங்கப்படும் போது. தங்கம் வாங்கப்படுவதற்கு சரியான நேரம் அல்லது தவறான நேரம் என்பது இல்லை.

முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கம்
 

முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கம்

ஆக நிபுணர்கள் முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்தின் கொஞ்சம் முதலீடு வைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். தங்கத்தின் நுகர்வானது திருமணம் உள்ளிட்ட பல நேரங்களில் இன்றியமையாத தேவையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பொருளாதார நிகழ்வினை பார்க்கும்போது, தங்கம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவிலும் சேர்ப்பது இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it right time to buy gold?

Gold is a considered a low risk and safe investment option in worldwide, especially during the uncertain times
Story first published: Wednesday, September 30, 2020, 11:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X