செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யாரும் எதிர்பாராத அளவு வரலாற்று உச்சத்தினை தொட்டது. இது குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும். என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அப்படி எண்ணியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நேற்று மட்டும் சவரனுக்கு ஆபரணத் தங்கத்தின் விலையானது 1.384 ரூபாய் சரிந்தது.

ஒரு புறம் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மறுபுறம் இப்படி இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே சரிந்து வருகிறது. சரி இன்று தங்கம் விலை எப்படி உள்ளது? இந்த விலையில் வாங்கலாமா? இன்னும் குறையுமா? இனி எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் இறக்குமதி சரிவு
 

தங்கம் இறக்குமதி சரிவு

பொதுவாக ஒரு பொருளின் தேவை அதிகமாக இருக்கும் போது, இருப்பு குறைவாக இருப்பின் அப்பொருளின் விலையானது நிச்சயம் அதிகரிக்கும். அந்த வகையில் தங்கம் இறக்குமதியானது 57% குறைந்து, 6.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், கொரோனா பாதிப்பின் காரணமாக தேவை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் இறக்குமதி குறைவு அதிக விலை மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை.

வெள்ளி இறக்குமதி சரிவு

வெள்ளி இறக்குமதி சரிவு

எனினும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கம் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதியானது 15.8 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இதே ஏப்ரல் - செப்டம்பர் 2020ல் வெள்ளி இறக்குமதியும் 63.4 சதவீதம் குறைந்து, 733.57 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது?

வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது?

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியானது வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வழி வகுத்துள்ளது. கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி - இறக்குமதிக்கான இடைப்பட்ட விகிதம் 23.44 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 88.92 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது.

எவ்வளவு தங்கம் இறக்குமதி?
 

எவ்வளவு தங்கம் இறக்குமதி?

இந்தியா உலகளவில் அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடாகும். வருடத்திற்கு சுமாராக 800 - 900 டன் தங்கத்தினை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் தேவை குறைவுக் காரணமாக இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இறக்குமதி குறைந்துள்ள அதே நேரத்தில், ஆபரணங்கள் ஏற்றுமதியும் 55% குறைந்து 8.7 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. ஆக ஒரு வகையில் தங்கம் இறக்குமதியானது குறைவும் கூட தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் தடுப்பூசி

தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும் தடுப்பூசி

தங்கம் விலையானது தொடர் சரிவினைக் காண வேண்டும் என்றால், அது கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தால் தான் முடியும். இது மிக மோசமான விஷயமாகும். தற்போது தடுப்பூசி செய்திகளால் தங்கம் நகர்வதை காணலாம். ஆனால் தங்கம் தடுப்பூசி நடப்பு ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்பது தவறான விஷயம. அது சாத்தியமான விஷயமாகவும் தெரியவில்லை என்றும் Lobo Tiggre தெரிவித்துள்ளது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலையானது இன்னும் சில வாரங்களில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம் என்கிறது கிட்கோ செய்திகள். எனினும் அக்டோபர் மாதம் முழுவதும் 1900 டாலர்களுக்கு அருகிலேயே இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரிக்கலாம் என்பதனைத் தான், பின்னர் ஏற்றம் காணலாம் என்றும் சூசகமாக கூறியுள்ளனர்.

நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்

நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்

இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில், யார் ஜெயிப்பார்கள் என்ற நிச்சயமற்ற சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்களின் பக்கம் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா அரசின் ஊக்கத் தொகை பற்றிய இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

இதற்கிடையில் பரவி வரும் கொரோனா, கொரோனா தடுப்பூசி பற்றிய நிச்சயமற்ற சூழல், அமெரிக்கா - சீன பதற்றம், பொருளாதார வீழ்ச்சி, வட்டி விகிதம், முதலீட்டு தேவை, பிசிகல் தங்கத்தின் தேவை, தங்கம் உற்பத்தி என அனைத்தும், தங்கத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில், சர்வதேச தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 6.10 டாலர்கள் குறைந்து, 1902.80 டாலர்களாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை எப்படி இருக்கும்? விலை அதிகரிக்குமா? அல்லது இப்போதே வாங்கலாமா? விற்கலாமா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

சற்று ஏற்றத்தில் காணப்படும் சர்வதேச வெள்ளி விலை

சற்று ஏற்றத்தில் காணப்படும் சர்வதேச வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது 0.25% ஏற்றம் கண்டு, 24.285 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இது அதிகரித்து வரும் வெள்ளிக்கான தேவையையே சுட்டிக் காட்டுகிறது. ஆக வெள்ளியின் இறக்குமதியும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இது இன்னும் விலை அதிகர்ப்புக்கு காரணமாக அமையலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவிலேயே முடிவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 10 கிராம் தங்கத்தின் விலையானது 160 ரூபாய் குறைந்து, 50,640 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருவது நினைவுகூறத்தக்கது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டாலும் வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தை முடிவில், கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 118 ரூபாய் அதிகரித்து 61,653 ரூபாயாக காணப்படுகிறது. தொழிற்சாலைகளில் வெள்ளியின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வெள்ளியின் விலையும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று இன்னும் விலையில் மாற்றம் காணவில்லை. இதே நேற்று சவரனுக்கு 1,384 ரூபாய், குறைந்து 37,440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது இனி வரும் விழாக்கால பருவங்களில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்பதால், விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும், இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. நேற்று தூய தங்கத்தின் விலையானது சவரனுக்கு 1,512 ரூபாய் குறைந்து, 40,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விலையானது இவ்வளவு குறைவாக இருப்பது, நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க ஏதுவாக அமைந்துள்ளளது.

சென்னையில் வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் பெரியளவில் இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. தங்கம் விலை குறைந்த போதிலும், நேற்றும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 61,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் தேவையானது வரவிருக்கும், பண்டிகை காலங்களில் அதிகரிக்கலாம் என்றும், அதோடு தொழில்சாலை தேவை மற்றும் முதலீட்டு தேவை என அனைத்தும் சேர்ந்து நீண்ட கால நோக்கில் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கலாமா?

இந்த நேரத்தில் தங்கத்தினை வாங்கலாமா?

நீண்டகால நோக்கில் எனும் போது தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைவாக உள்ள நிலையில், நீண்டாகால் நோக்கில் தங்கத்தினை வாங்கவே முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் முக்கிய காரணிகள் அனைத்தும், தங்கம் விலை ஏற்றம் காணவே சாதகமாக அமைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it right time to buy gold and silver?

Gold and silver prices crash in biggest fall in yesterday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?