குறைந்த விலையில் தங்கம் விலை..இப்போது வாங்கலாமா.. இது சரியான நேரமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், தங்கத்தின் மீதான ஆர்வம் நம் மக்களுக்கு குறைவதேயில்லை. ஏனெனில் இன்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சொல்லப்போனால் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத உலோகமாக மாறிப் போயுள்ளது.

இப்படி மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் விலையானது, இன்று வரை இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தங்கம் விலை வரலாறு
 

தங்கம் விலை வரலாறு

அதனை நிரூபிக்கும் விதமாக தங்கம் விலையானது சற்று குறைவது போல் குறைந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது விலையானது அதிகரித்து தான் காணப்படுகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நேரத்தில் கூட தங்கம் விலையானது வெறும் 88.62 ரூபாயாகத் தான் இருந்துள்ளது. ஏன் 1979 வரையில் கூட 10 கிராம் தங்கத்தின் விலையானது 1000 ரூபாய்க்கு கீழே தான் இருந்துள்ளது.

தங்கம் விலை 2007-க்கு பிறகு தான் ஏற்றம்

தங்கம் விலை 2007-க்கு பிறகு தான் ஏற்றம்

சொல்லப்போனால் 2007க்கு மேல் தான் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏன் 2018ல் கூட அதிகபட்சம் 31,535 ரூபாய் சொல்லப்போனால் 2007க்கு பிறகு தான் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏன் 2018ல் கூட அதிகபட்சம் 31,535 ரூபாய் வரை தான் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத அளவு 54,500 ரூபாய் வரை உச்சம் தொட்டது. வரை தான் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத அளவு 10 கிராம் தங்கத்தின் விலை, 54,500 ரூபாய் வரை உச்சம் தொட்டது.

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சரி இப்படியே ஏற்றமே தான் கண்டு கொண்டிருக்குமா? குறையவே குறையாதா? இப்போது வாங்கி வைக்கலாமா? என்பதனைத் தான் இன்று பார்க்க விருக்கிறோம். நடப்பு ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. எனினும் செப்டம்பர் தொடக்கம் முதல் கொண்டு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது இன்று வரையில் சற்று குறைந்துள்ளது.

நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கும்
 

நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கும்

இன்று விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது சரிவில் தான் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். உள்நாட்டு கமாடிட்டி ஆய்வாளர்கள் முதல் கொண்டு, சர்வதேச நிபுணர்கள் வரையில் கூறுவது தங்கம் விலை அதிகரிக்கும் என்று தான். ஆக இந்த நிலையில் எழும் ஒரே கேள்வி தங்கம் விலை அதிகரிக்குமா? என்பது தான்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா பொருளாதாரமும், அமெரிக்காவின் நாணய மதிப்பும் இன்று வரை அழுத்தத்திலேயே உள்ளன. இதனால் பத்திர சந்தைகளும் சரிவிலேயே காணப்படுகின்றது, அதோடு அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்த நன்மையும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு சந்தை

வேலை வாய்ப்பு சந்தை

அதோடு அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையும் இன்னும் அழுத்தத்தில் தான் உள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நெருங்கி வந்து கொண்டு இருக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது மிக பின்னடைவாக பார்க்கப்பட்டது.

தங்கம் விலை

தங்கம் விலை

ஆக இதுவும் தங்கத்திற்கு எதிராக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதன் காரணமாக நேற்று வரையில் சற்று சரிவில் இருந்த தங்கம் விலையானது இன்று மீண்டும் தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது தங்கம் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

 தங்கம்  - டெக்னிக்கல் அனாலிசிஸ்

தங்கம் - டெக்னிக்கல் அனாலிசிஸ்

தங்கம் விலையானது தற்போது சைடுவேயாக வர்த்தகமாகி வருகிறது. தற்போது சப்போர்ட் லெவல் 1890 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1940 டாலர்களாகும். நடுத்தர கால அளவில் தற்போதைக்கு தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் 1927 டாலர்களை தாண்டியும் வர்த்தகமானால் 1967 டாலர்கள் வரை கூட செல்ல வாய்ப்புண்டு.

எனினும் இண்டிராடே வர்ரத்தகத்தினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 1920 டாலர்களுக்கு மேல் நின்று வர்த்தகமானால் மட்டுமே விலையானது இன்று அதிகரிக்கும்.

மூவிங்க் ஆவரேஜ் என்ன சொல்கிறது?

மூவிங்க் ஆவரேஜ் என்ன சொல்கிறது?

அதோடு சிம்பிள் மூவிங்க் ஆவரேஜ் இண்டிகேட்டர்கள் MA10, MA20, MA50, MA100, MA200 உள்ளிட்ட அனைத்துமே பையிங் சிக்னலையே கொடுத்துக் கொண்டுள்ளன.

இதெ போல ஆர்எஸ்ஐ, எம்ஏசிடி, ஸ்டொகாஷ்டிக் ஆசிலேட்டர் உள்ளிட்ட இண்டிகேட்டர்களுக்கும் வலுவான பையிங் சிக்கனலையே கொடுத்துக் கொண்டுள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ்

தினசரி கேண்டிலை அடிப்படையாகக் கொண்டது

பிவோட் பாயிண்ட் 1895.23 டாலர்களாகும்

S1 - 1885.16 S2 - 1875.23 S3 - 1865.16

R1 - 1905.16 R2 - 1915.23 R3 - 1925.16

இதுவே வார அடிப்படையில்

பிவோட் பாயிண்ட் 1894.10 டாலர்களாகும்

S1 - 1864.60 S2 - 1821.60 S3 - 1792.10

R1 - 1937.10 R2 - 1966.60 R3 - 2009.60

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்கும்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்கும்

அமெரிக்காவின் முதலீட்டு குரு என்று அழைக்கப்படும் ஜிம் ரோஜெர்ஸ், சில வாரங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும். நான் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ச்சியாக 2019 முதல் முதலீடுகளை செய்து வருகிறேன், இனியும் தொடர்ந்து இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் சமீபத்திய அறிக்கையில், தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறியுள்ளது. தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் பட்சத்தில், தங்கத்தின் அடுத்த டார்கெட் 2021ல் அவுன்ஸூக்கு 2,450 டாலர்கள் வரையில் செல்லலாம். இதே இந்திய மதிப்பில் 65,000 - 68,000 ரூபாய் வரை செல்லலாம் என்றும் கணித்திருந்தது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

தங்கம் ஆபரணமாக மட்டும் அல்ல, பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. அதோடு நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. முக்கியமாக கொரோனா வைரஸ் பரவல், சரிந்து வரும் பொருளாதாரம், அமெரிக்கா சீன பதற்றம், தங்கம் தேவை, முதலீட்டு தேவை என பல காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it right time to invest in gold?

Gold price will soon back to its new all time high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X