தங்கம் விலை ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்று பார்ப்பதே, தற்போதைய சூழலில் பலரது காலை நேர வேலையாகிவிட்டது. குறிப்பாக, 2026-ம் ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு செய்கூலி, சேதாரத்துடன் சுமார் 1.5 லட்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், நாளை (திங்கட்கிழமை) சந்தை எப்படி இருக்கும் என்ற படபடப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
ஒருபுறம் உலகளாவிய அரசியல் பதற்றங்கள், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் என தங்கம் மற்றும் வெள்ளி விலையை தீர்மானிக்க பல காரணிகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆக இனி தங்கம் மீண்டும் எதை நோக்கி ஓடும். வெள்ளியின் விலை உயர்வு எப்போது நிற்கும்? முதலீட்டாளர்கள் இப்போது வாங்கலாமா அல்லது விற்கலாமா? நிபுணர்களின் அதிரடி கணிப்புகள் மற்றும் சந்தை நிலவரத்தின் முழுமையான விவரங்கள், வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான பிரச்சனையானது தோல்வி கண்டுள்ள நிலையில், நாளை பங்குச் சந்தைகள், தங்கம், கச்சா எண்ணெய் விலை என அனைத்தும் என்னவாகுமோ என்ற பதற்றமானது முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக சமீபத்திய வாரங்களாக தட்டு தடுமாறி வந்த தங்கம், நாளை முதல் மீண்டும் ஏற்றம் காணுமா அல்லது மீண்டும் அழுத்தத்தில் இருக்குமா என்பது பல மில்லியன் கேள்விகளாக முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல காரணிகளின் மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உடன் முடிவடைந்த வாரத்தில் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்த தங்கம் விலையானது, நடப்பு வாரத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சு வார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தது. இது மேற்கொண்டு பிரச்சனை அதிகரிக்கலாம் என்ற நிலையையே காட்டுகிறது. ஆக சற்று ஆறுதல் கண்டிருந்த மத்திய கிழக்கு பகுதிகளில், மீண்டும் பதற்றமானது தொற்றிக் கொண்டுள்ளது. இதனிடையே நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலையானது 5,000 டாலர்களை கடந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த போதே ஹார்மூஸ் பகுதியில் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், தற்போதைக்கு இது சரியாக வாய்ப்பே இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
இனி வரவிருக்கும் நாட்களில் ஈரான் - அமெரிக்காவின் போக்கை பொறுத்து, தங்கம் விலை இருக்கலாம் என கூறும் நிபுணர்கள், ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் பிடி கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் துணை அதிபரான ஜேடி வேன்ஸ், மிகப்பெரிய கெட்ட செய்தி என்று கூறியுள்ளார். எனினும் இது ஈரானுக்கு கெட்ட செய்தி என்றும் கூறியுள்ளது அமெரிக்கா மீண்டும் மோதலுக்கு தயாராகி விட்டதையே காட்டுகிறது.
இது பங்குச் சந்தைகள் சரிவை காண வழிவகுக்கலாம். கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காணலாம். அதேசமயம் தங்கம் வெள்ளி விலை நாளை பெரிய மாற்றம் ஏதும் இன்றி இருக்கும். ஆனால் பிரச்சனை பெரிதாக வெடிக்கும் பட்சத்தில் கேப் அப் ஆகியும் தொடங்கலாம். குறுகிய காலத்தில் நிச்சயமற்ற சூழலில் இருக்கும் என எதிர்பார்க்கும் நிபுணர்கள், நீண்ட கால அடிப்படையில் போரின் போக்கு, இந்தியா மற்றும் சீனாவிலும் தங்கத்திற்கான தேவை, பணவீக்கம், போர் ஒப்பந்தம் இதை பொறுத்து மாறுபடலாம். அதையும் தாண்டி வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் எப்போதுமே மொத்தமாக பணம் போடுவதை தவிர்த்து, SIP முறையில் தங்கம் வாங்குவது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications