இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 65 வயதான நிலையில் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வாரிசு கைகளுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
திருபாய் அம்பானி இறந்த உடன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சொத்துக்களுக்காக எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், இதேபோன்ற பிரச்சனை தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோருக்கு வர கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை 3 ஆகப் பிரித்து 3 பிள்ளைகளுக்கும் அளிக்கத் திட்டமிட்டு உள்ளார்.
முகேஷ் அம்பானி
65 வயதான முகேஷ் அம்பானி நிர்வாகம் செய்யும் 222 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45 வது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் நிர்வாகப் பொறுப்பு கைமாற்றுவது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
45வது வருடாந்திர பொதுக் கூட்டம்
இன்று நடக்க உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இக்குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பைத் தனது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஜூன் மாதம் ரிலையன்ஸ் ஜியோ-வின் சேர்மன் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்த நிலையில், அவருடைய மூத்த பிள்ளையான ஆகாஷ் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் வாரிசு கைகளுக்கு ரிலையன்ஸ் மாறுவதன் முதல் படியாகப் பார்க்கப்பட்டது மட்டும் அல்லாமல் எதிர்கால வளர்ச்சி பணிகளின் ஆரம்பக் கட்டமாகப் பார்க்கப்பட்டது.
3 பிள்ளைகள்
ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகிய 3 பிள்ளைகளும் பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளிலும், தலைவர்களுடனும், உயர் அதிகாரிகள் உடனும் பணியாற்றிய பின்னரே முகேஷ் அம்பானி நிர்வாகத்தை வாரிசு கைகளுக்கு மாற்ற முடிவு செய்தார்.
ஈஷா அம்பானி
இதன் மூலம் இன்றைய கூட்டத்தில் ஈஷா அம்பானி-க்கு ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் சேர்மன் பதிவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனந்த் அம்பானி
இதில் அனந்த் அம்பானி இளையவர் என்பதால் சில ஆண்டுகளுக்குப் பின்பு தான் நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது, இன்றைய 45வது வருடாந்திர கூட்டத்தில் முழுக் கவனமும் ஈஷா அம்பானியின் நிர்வாகப் பொறுப்பு கைமாறுவது தான்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications