ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தான் ராக்ஸ்டாராக இருக்கும் வேளையில் பெரும்பாலான வர்த்தக விரிவாக்கம் மற்றும் முதலீடுகளும் இதை சார்ந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது, இதை கைப்பற்ற முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளது.
இதில் ஒரு முன்னோடியாக ஈஷா அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் ஒவ்வொரு பிரிவுக்கும் தனி பிராண்டை உருவாக்கி இந்தியா முழுவதும் வேகமாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் இந்திய இளம் தலைமைமுறையினர் மத்தியில் அதிகம் பிரபலமாக இருக்கும் முக்கிய பிராணடாக மாறியுள்ளது டாடா குழுமத்தின் Zudio, இந்த பிராண்டின் ஆடைகள் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்களை ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கும் வேளையில்.. டாடா குழுமத்தின் Zudio ஆதிக்கத்தை தகர்க்கவும் இந்த பிராண்ட் உடன் நேரடியாக போட்டிப்போடவும் ரிலையன்ஸ் ரீடைல் முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் இந்தியா முழுவதும் Yousta என்னும் புதிய பேஷன் பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிராண்டு கடைகள் இந்தியா முழுவதும் 200 முதல் 250 கடைகள் திறக்கப்பட உள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் தென்னிந்தியாவை அதிகம் டார்கெட் செய்யும் காரணத்தால் முதல் Yousta பிராண்ட் கடையை ஹைதராபாத்தில் திறக்க முடிவு செய்துள்ளது.
Yousta பிராண்ட் குறித்தும், அதன் வர்த்தக மாடல் குறித்தும் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் Yousta என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டுமான பொருட்கள் சப்ளை பிராண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Yousta பிராண்ட்-ன் முதல் கடையை ஹைதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் திறப்பது மட்டும் அல்லாமல் டெல்லியில் சுமார் 10000 சதுரடியில் புதிய கடை திறக்கும் பணியிலும் ரிலையன்ஸ் ரீடைல் இறங்கியுள்ளது. ஆடை மற்றும் லைப் ஸ்டைல் பிரிவில் டாடா மற்றும் ரிலையன்ஸ் நேருக்கு நேர் போட்டிப்போடுகிறது. டாடா-வின் Zudio இந்தியா முழுவதிலும் தற்போது 350 கடைகளை திறந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் கீழ் தற்போது ஆடை மற்றும் லைப் ஸ்டைல் பொருட்கள் விற்பனைக்காக ரிலையன்ஸ் டிரென்ட்ஸ், AZORTE, Avantra By Trends, CENTRO,
Fashion Factory ஆகியவை உள்ளது. இவை அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக இணைக்க AJIO உள்ளது. மேலும் வெளிநாட்டு பிராண்டுகளான Versace, Balenciaga, Armani, Jimmy Choo, Gas, Hugo Boss போன்றவற்றுடன் விற்பனை கூட்டணி Reliance Brands கீழ் உள்ளது.


Click it and Unblock the Notifications