JioStar நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம்? எந்தெந்த பிரிவுகளில் இருப்பவர்களுக்கு பாதிப்பு?

ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள கூட்டு நிறுவனமான ஜியோஸ்டார் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஜியோஸ்டார் அண்மையில் செலவுகள் அதிகரித்து லாபம் குறைந்ததாக நிதி நிலை தகவல்களை வெளியிட்ட நிலையில் பணிநீக்க தகவல்கள் வந்துள்ளன.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் ஜியோஸ்டார் நிறுவன வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சுமார் 150 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இருப்பினும், பாதிக்கப்படும் ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை ஆரம்ப மதிப்பீட்டை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என அதில் சந்தேகம் தெரிவித்துள்ளது.

JioStar நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம்? எந்தெந்த பிரிவுகளில் இருப்பவர்களுக்கு பாதிப்பு?

ஜியோஸ்டாரில் மார்க்கெட்டிங், தயாரிப்பு , ஸ்டுடியோக்கள் மற்றும் பிற செயல்பாட்டு துறைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் உள்ள ஊழியர்களை இந்த பணிநீக்கம் பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜியோஸ்டார் தரப்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஜியோஸ்டார் , தனது வர்த்தக பிரிவினை சீரமைத்து நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான வாய்ப்புள்ள வணிகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிடுவதாக அண்மையில் தெரிவித்திருந்தது. நிறுவன மறுசீரமைப்பு காரணமாக பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத ஊதியத்திற்கு சமமான பணிநீக்க தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டிற்கான போனஸ் பெறவும் அவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Also Read

2024ஆம் ஆண்டு நவம்பரில் வயாகாம்18 மற்றும் டிஸ்னியின் ஸ்டார் இந்தியா ஆகியவவை இணைக்கப்பட்டு ஜியோஸ்டார் உருவாக்கப்பட்டது. இந்த இணைப்பு தொலைக்காட்சி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாட்டு வணிகங்களை ஒன்றாக கொண்டு வந்தது. இந்த இணைப்பிற்கு பின் ஒரே மாதிரியான பணிகளை நீக்கவும், செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், செலவுகளை குறைக்கவும் விரிவான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் 500-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்போது விற்பனை, சந்தைப்படுத்தல், நிகழ்ச்சி தயாரிப்பு, விநியோகம் மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளில் பணிநீக்கங்கள் மற்றும் மறுநியமனங்கள் செய்யப்பட்டன. ஆனால் இது நிறுவன இணைப்பால் ஏற்பட்ட மாற்றம் தான். இப்போது செலவு குறைப்பு , மறுசீரமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

Recommended For You

அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்துவது லாபத்தை அதிகப்படுத்துவது ஆகியவற்றை நோகமாக கொண்ட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜியோஸ்டாரின் நிகர லாபம் 13.2% குறைந்தது. மொத்தமாக கிடைத்த வருமானம் 10% உயர்ந்து 6806 கோடியாக இருந்தது, ஆனால் லாபம் குறைந்துவிட்டது. இதற்கு செலவினங்கள் அதிகரித்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 440 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ளது ஜியோ ஸ்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+