தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இறங்கிய வேகத்திலேயே தங்கம் விலை உயர்வதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் இன்றைய தினம் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 115 ரூபாய் உயர்ந்து, 11,715 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 920 ரூபாய் விலை கூடி 93,710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்களாக குறைந்து வந்த தங்கம் விலை திடீரென உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1,745 ரூபாயும் ஒரு சவரனுக்கு 13,960 ரூபாயும் விலை சரிந்தது. ஆனால் நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களிலேயே தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாயும் சவரனுக்கு 2000 ரூபாயும் உயர்ந்துவிட்டது. இனி விலை ஏற்றமுடன் தான் இருக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் விலை குறையுமா என காத்திருக்காமல் நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வாங்கி வைத்து விடலாம் என கூறுகின்றனர்.
உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே தமிழ்நாட்டிலும் தங்கம் விலை இன்று உயர காரணமாகும். 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,780 ரூபாய்க்கும் 10 கிராம் 1,27,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,585 ரூபாய்க்கும் ஒரு சவரன் 76,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமில்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை 1.75 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை உயர்ந்த போதும் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் நேற்று முதல் உயர்ந்து வருகின்றன. தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 90 டாலர்கள் உயர்ந்து 3,631 டாலர்களாக உள்ளது. வெள்ளி விலை அவுன்ஸுக்கு 1 டாலர் உயர்ந்து 42.65 டாலர்களாக உள்ளது. அடுத்த மாதம் நடக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் தான் தங்கம் , வெள்ளியின் பாதைகளை நிர்ணயிக்க போகிறது. அது வரை தங்கம் விலை ஏற்றமாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

