ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல், புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மிரட்டல் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து பல பதிய உச்சங்களை தொட்டது. இதனால் மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை இன்று எவ்வளவு உயருமோ என்று அச்சப்படும் அளவுக்கு அதன் விலை இருந்து வருகிறது. மேலும், டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சர்வதேச வர்த்தக போரை ஏற்படுத்தும் அச்சம் அதிகரித்துள்ளது இதனால் தங்கத்தின விலை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தங்கம் விலை மீண்டும் தரை தட்டும் என்று பிரபல சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் சந்தை உத்தியாளர் ஜான் மில்ஸ், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,820 டாலராக குறையும் என்று மதிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,080 டாலர் என்ற அளவில் உள்ளது. அவரது கணிப்பின்படி, வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை தற்போதைய விலையிலிருந்து 38 சதவீதம் குறையும். கடந்த மார்ச் 31ம் தேதியன்று, 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.89,510ஆக இருந்தது, எதிர்பார்க்கும் விலை சரிவு நிகழ்ந்தால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.55,496ஆக குறையும்.

தங்கத்தின் விலை தற்போது ஏறுமுகத்தில் இருந்தாலும், பல்வேறு காரணங்கள் தங்கத்தின் விலையில் சரிவை தூண்டும் என்று ஜான்மில்ஸ் மற்றும் பிற ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதி்ல் முதலாவது, சர்வதேச அளவில் தங்கம் விநியோகம் அதிகரித்து வருகிறது, 2024ம் ஆண்டின் 2வது காலாண்டில் தங்க சுரங்கங்களின் லாபம் அவுன்ஸ் ஒன்றுக்கு 950 டாலராக அதிகரித்தது. இது உற்பத்தியை அதிகரிக்க தூண்டியது. குறிப்பாக ஆஸ்திரேலியா தனது தங்க உற்பத்தியை அதிகரித்தது. மேலும் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வதும் அதிகரித்துள்ளது. இது விலைகளை குறைக்கக்கூடிய விநியோக அழுத்தத்தை மேலும் சேர்த்துள்ளது.
மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தை தீவிரமாக வாங்கி வரும் தற்போதைய போக்கு நீடிக்காது. தொடர்ந்து 3வது ஆண்டாக 2024ம் ஆண்டிலும் நாடுகளின் மத்திய வங்கிகளின் மொத்த தங்க கொள்முதல்1,000 டன்களை தாண்டி விட்டது. இருப்பினும், உலக தங்க கவுன்சிலின்படி, 71 சதவீத மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை அதிகரிப்பதற்கு பதிலாக குறைக்கவோ அல்லது அதே அளவை பராமரிக்கவோதான் விரும்புகின்றன. வரலாற்று ரீதியாக கோவிட-19 தொற்றுநோய் போன்ற பெரிய நெருக்கடிகளுக்கு பிறகு, பொருளாதார ஸ்திரத்தன்மை திரும்பும்போது தங்கத்தின் விலைகள் உயர்ந்துள்ளன, பின்னர் குறைந்துள்ளன.
தங்க துறைக்குள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலில் ஏற்படும் அதிகரிப்பு பெரும்பாலும் சந்தை உச்சங்களை குறிக்கிறது. 2024ம் ஆண்டில் தங்க துறையில் ஒப்பந்தங்கள் 32 சதவீதம் அதிகரித்தது. இது சந்தை அதிக கொதிக்கக்கூடும் என்பதை குறிக்கிறது. இடிஎஃப் முதலீடுகளில் சமீபத்திய ஏற்றங்கள் கூர்மையா வலை திருத்தங்களுக்கு முன்பு காணப்பட்ட முந்தைய முறைகளை ஒத்திருக்கின்றன. இது ஒரு சரிவு உடனடியாக ஏற்படக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்துகிறது. தங்கத்தின் விலை குறையும் என்ற ஜான் மில்ஸின் கணிப்புகள் இருந்தபோதிலும், கோல்ட்மேன் சாக்ஸ் உள்பட பல நிதி நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3,300-3,500 டாலர்களாக என்று கணித்துள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications