120 கிலோ தங்கம் பறிமுதல்.. அதிரடி ரெய்டு நடத்திய GST அதிகாரிகள்..!!

கேரள மாநிலத்தின் திரிசூரில் தங்க நகை தயாரிப்பு நிறுவனங்களில், கேரள மாநிலத்தின் ஜிஎஸ்டி அமைப்பினர் பெரிய அளவில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேர சோதனையில் சுமார் கேரள மாநில சரக்கு மற்றும் சேவை வரி (GST) துறையினர் சுமார் 120 கிலோ மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தங்க நகைக் கடைகள் பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வரும் வேளையில், ஜிஎஸ்டி துறையினரின் இந்த அதிரடி சோதனை நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

120 கிலோ தங்கம் பறிமுதல்.. அதிரடி ரெய்டு நடத்திய GST அதிகாரிகள்..!!

இந்த அதிரடி சோதனைக்கு "டோரே டெல் ஓரோ" (Torre del Oro) என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இந்த சோதனை நடவடிக்கையில் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திரிசூர் மாவட்டம் முழுவதும் உள்ள தங்க நகை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் நகைக்கடைக்காரர்களின் வீடுகள், கடைகள் உள்ளிட்ட சுமார் 78 இடங்களை ஆய்வு செய்தனர்.

புதன்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை வரை தொருடந்து வரும் இந்த அதிரடி சோதனையில், பில்லிங் மற்றும் வரிவிதிப்பு செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதோடு கணக்கில் காட்டப்படாத 120 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த அதிரடி சோதனை குறித்து ரகசியத்தைப் பேணுவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து GST அதிகாரிகள் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் திரிசூருக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்த மெகா சோதனையை கேரள மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் நீண்ட காலமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டு உள்ளது என தெரிகிறது.

கேரள மாநிலத்தில் பிற பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்ட அனைத்து ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும் "study tour" என்று குறிக்கப்பட்ட பேருந்துகளில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சோதனைக்காகக் களத்தில் இறங்கிய போது தான் அனைவருக்கும் தெரியும். GST சிறப்பு கமிஷனர் அபிரகாம் ரென்னின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+