டிவிஎஸ் வாகனத்தை பார்த்தவுடனே அது நம்ம ஊருக்காரர் வண்டி என்ற நெருக்கமான உணர்வு பலருக்கு ஏற்படும். டிவிஎஸ் குழுமம் வாகன தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு என பல்வேறு வர்த்தகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.22,470 கோடியாகும். வேணு சீனிவாசனுக்கு லட்சுமி வேணு (மகள்), சுதர்சன் வேணு (மகன்) என்று இரண்டு வாரிசுகள் உள்ளனர். சுதர்சன் வேணு டிவிஎஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

தந்தை அளவுக்கு இந்திய தொழில் துறையில் மிகவும் பிரபலமானவர் லட்சுமி வேணு. இவர் நம்ம சென்னையில் வளர்ந்தவர், அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியில் படித்தவர். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். படிப்பு முடிந்தவுடன் பிசினஸில் இறங்க முடிவு செய்தார்.
ஆனால் நம்ம கம்பெனி தானே என்று டிவிஎஸ் நிறுவனத்தின் எந்த உயர் பதவியிலும் அமர்ந்து விடவில்லை. முதலில் டிவிஎஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சுந்தரம் காம்பொன்டென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். வணிக உத்தி, கார்ப்பரேட் விவகாரங்கள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
2010ல் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட்(எஸ்.சி.எல்.) நிறுவனத்தில் கூட்டு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். நவம்பர் 6ம் தேதி நிலவரப்படி, எஸ்.சி.எல். நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.13,430 கோடியாக உள்ளது.
சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தகத்தை உலக அளவில் விரிவடைய செய்வதில் இவர் முக்கிய நபராக இருந்தார். டிவிஎஸ் குழுமத்தில இயக்குனர்கள் குழுவில் உள்ளார். டாஃபே மோட்டார்ஸ் மற்றும் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
2018ல் மகேஷ் கோகினேனியை லட்சுமி வேணு கரம் பிடித்தார். மகேஷ் கோகினேனியின் குடும்பமும் சாதாரணமனது அல்ல. சுதந்திர கட்சியின தலைவரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான என்.ஜி. ரங்காவின் கொள்ளுப் பேரன் தான் மகேஷ் கோகினேனி.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications