யூடர்ன் அடித்த Oracle சேர்மன்.. திடீரென முடிவை மாத்திய லேரி எலிசன்!

உலகளவில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியின் தூணாக நிற்கும் ஆரக்கிள் நிறுவனம் தொடர்வந்து தனது டேட்டா சென்டர் திறனையும், கம்பியூட்டிகங் பவரையும் பெரிய அளவில் மேம்படுத்தி வரும் வேளையில் முக்கிய முடிவை எடுத்துள்ளார் அதன் சேர்மன் லேரி எலிசன்.

டெக் துறையில் சேவை பிரிவின் வெற்றி மட்டுமே் பொதுஜன மக்களால் கொண்டாடப்படும் நிலையில், எண்டர்பிரைஸ் பிரிவிலும், வன்பொருள் பிரிவிலும் இமாலய சாதனையை அடைந்த நிறுவனம் ஆரக்கிள், இந்நிறுவனம் தற்போது எவ்விதமான பேதமும் இல்லாமல் அனைத்து ஏஐ நிறுவனங்களுக்கும் உலகம் முழுவதிலும் டேட்டா சென்டர், கம்பியூட்டிங் பவரை கொடுத்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 யூடர்ன் அடித்த Oracle சேர்மன்.. திடீரென முடிவை மாத்திய லேரி எலிசன்!

லேரி எலிசன் தலைமையிலான ஆராக்கிள் டேட்டா சென்டர் விரிவாக்கத்திற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், கடன் வாங்கியும், பங்குகளை விற்பனை செய்தும் நிதியை திரட்டி வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக அனைத்து ஏஐ மாடல் நிறுவனங்களும் இத்துறையின் விரிவாக்கத்தையும், சேவை மேம்பாட்டையும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் செயின் ரியாக்ஷனாக லேரி எலிசன் திட்டமிட்டு இருந்து மிகப்பெரிய பங்கு விற்பனையை ரத்து செய்துள்ளார். லேரி எலிசன் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 40 சதவீத ஆரக்கிள் பங்குகளில் சுமார் 50 மில்லியன் பங்குகளை 7.5 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்ய 10b5-1 என்ற திட்டத்தை இந்த வருடத்தின் துவக்கத்தில் வகுத்தார்.

ஆனால் தற்போது பங்கு விற்பனை திட்டம் கைவிடப்பட்டதாகலும், லேரி எலிசன் எவ்விதமான பங்குகளையும் விற்கவில்லை எனவும் ஆரக்கிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்தக்கட்ட பணிநீக்க திட்டமும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. லேரி எலிசன் எடுத்த முடிவு தான் தற்போது வெறும் எண்டர்பிரைஸ் சாப்ட்வேராக இருந்த நிறுவனம் தற்போது ஒரு ஏஐ இன்பரா நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் வாயிலாக ஆராக்கிள் தற்போது பெரும் கடனில் மூழ்கியிருக்கும் காரணத்தால் அதன் பங்கு விலை சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்த கடன் அளவுகளை குறைக்கவும், செலவுகளை குறைக்கவும் ஏப்ரல் மாதம் மட்டும் உலகம் முழுவதும் மொத்தம் 21,000 பேருக்கு மேல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் இந்தியாவில் மட்டும் 12000 ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

ஆரக்கிள் மீண்டும் பெரிய அளவிலான பணிநீக்கத்தை செய்ய திட்டமிட்டு வருவதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியானது. இதன் படி குறைந்தபட்சம் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டு வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+