நடப்பு வாரத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 1,090.21 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.89% அதிகரித்து, 58,786.67 புள்ளிகளாகவும். நிஃப்டி 50 314.60 புள்ளிகள் அல்லது 1.83% அதிகரித்து, 17,511.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் பல்வேறு நிறுவன பங்குகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக அதன் சந்தை மூலதனமும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் நடப்பு வாரத்தில் டாப் 10 சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களில், ரிலையன்ஸ் தான் வழக்கப்போல முதலிடத்தில் உள்ளது. டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2,282367.9 கோடி ரூபாய அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் தான் முதலிடம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 1,35,204.46 கோடி ரூபாய் அதிகரித்து, 16,62,776.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2458.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
நாட்டில் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு 5,125.39 கோடி ரூபாய் அதிகரித்து, 8,43,523.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,522.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்-ன் சந்தை மதிப்பு
நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்-ன் சந்தை மதிப்பு 9,988 கோடி ரூபாய் அதிகரித்து, 7,39,607.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,759.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
இதே மற்றொரு தனியார் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி யின் சந்தை மதிப்பு 28,817.13 கோடி ரூபாய் அதிகரித்து 5,26,170.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 758 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி-ன் மூலதனம்
ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 7,050.11 கோடி ரூபாய் அதிகரித்து 5,08,612.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.17% குறைந்து, 2,808.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்-ன் மூலதனம்
தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 22,993.93 கோடி ரூபாய் அதிகரித்து 4,49,747.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 7,452.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
எஸ்பிஐ –ன் மூலதனம்
நாட்டின் மிகப்பெரிய முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் சந்தை மூலதனம் 19,187.91 கோடி ரூபாய் அதிகரித்து, 4,41,500.53 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.24% அதிகரித்து, 494.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டி.சி.எஸ்-ன் மதிப்பு சரிவு
இதே நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ன் சந்தை மூலதனம்,
1,146.7 கோடி ரூபாய் குறைந்து, 13,45,178.53 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 3,636.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம்,
2,396 கோடி ரூபாய் குறைந்து, 5,48,136.15 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2332.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் மூலதனம்
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம், 4,256.32 கோடி ரூபாய் குறைந்து, 3,90,263.46 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து, 710.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications