தங்கம் விலை மீண்டும் ரூ.58,000 தொடலாம்.. வெள்ளி விலை எப்படியிருக்கும் தெரியுமா.. ரெடியா இருங்க!

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு கடந்த வாரத்தில் 58,000 ரூபாயினை எட்டிய நிலையில், இது தற்போது 56,000 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

எனினும் விரைவில் இது மீண்டும் 58,000 ரூபாயினை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதேசமயம் வெள்ளி விலையானது கிலோவுக்கு 63,500 ரூபாயாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தால் வாங்கலாம்

குறைந்தால் வாங்கலாம்

ஆக தங்கம் விலையானது குறையும்பட்சத்தில் அதனை குறைந்த விலையில் வாங்கி வைப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால போக்கில் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது 56,235 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து லெவலுக்கு கீழாக இருக்கும்பட்சத்தில் இது இன்னும் சற்றே குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றொரு ஆய்வறிக்கை

மற்றொரு ஆய்வறிக்கை

மற்றொரு ஆய்வறிக்கையில் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு 60,000 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலையுயர்ந்த உலோகமானது 6.27% அளவுக்கு ஜனவரி மாதத்தில் ஏற்றம் கண்டுள்ளது. இது அடுத்த ஒரு மாதத்தில் 20% எனும் அளவுக்கு ஏற்றம் காணலாம் என நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக விரைவில் தங்கம் விலையானது புதிய உச்சத்தினை எட்டலாம்.

பணவீக்கம்

பணவீக்கம்

கடந்த வாரத்தில் ஐஐஎஃப்எல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பணவீக்கம் என்பது இன்னும் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆக தொடர்ந்து பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். பொருளாதாரமும் சர்வதேச அளவில் பல நாடுகளும் சரிவினைக் காணலாம் என கணித்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது, சற்றே தடுமாறி வரும் நிலையில் இது மேற்கொண்டு நீண்டகால போக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

உலகின் இரண்டாவது நுகர்வோரான இந்தியாவில் தேவையானது அதிகரித்து வருகின்றது. சர்வதேச சந்தையில் இந்தியா ஒரு வலுவான தூண். ஏனெனில் சீனாவினை அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்வது இந்தியா தான். அதிலும் இந்திய அரசு வர்த்தக பற்றாக்குறை இடைவெளியை குறைக்க தங்கம் இறக்குமதி மீதான வரியை அதிகரித்தது. கடந்த பட்ஜெட் 2023லும் வரியை அதிகரித்தது. ஆக இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

 தங்கம் ஏற்றுமதி அதிகரிப்பு

தங்கம் ஏற்றுமதி அதிகரிப்பு

தங்க நகை ஏற்றுமதியானது இந்தியாவில் 2015ல் 7.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2019ல் 12.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில் பிரைடல் ஜூவல்ஸ் சந்தையில் 50 - 55% பங்கினை வகிக்கிறது. ஆக இது இனி வரும் எதிர்காலத்திலும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சந்தை எது?

முக்கிய சந்தை எது?

இதில் பெரும்பாலான தங்கமானது 80 - 85% 22 கேரட் தங்கமாகவும் உள்ளது. இதில் 18 கேரட் தங்கத்திற்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. தினசரி அணியும் நகை சந்தையில் இது 40 - 45% பங்கு வகிக்கிறது.

கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த நகைகளில் 38% சாதாரணம் நகையாகவும் இருந்தது. இந்தியாவின் நகை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90% 5 முக்கிய சந்தைகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து என உலக தங்க கவுன்சில் பட்டியலிட்டுள்ளது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இந்த போக்கானது இனியும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையில், தொடர்ந்து நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா தங்கத்தினை மட்டும் அல்ல, வெள்ளி ஆபரணங்களையும் ஏற்றுமதி செய்து வருகின்றது. ஆக இது வெள்ளிக்கும் நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+