தோல்வி என்பது நமது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை என்பதுதான், நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சி செய்தால் சாதிக்கலாம். இந்தியாவின் கூகுள் என்று அழைக்கப்படும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிறுவனர் வி.எஸ்.எஸ். மணியின் வணிக முயற்சிகள் நமக்கு பெரிய நம்பிக்கை மற்றும் உத்வேகம் அளிக்கும்.
பெரிய அளவில் நிதி ஆதாரமும், வணிக நிபுணத்துவமும் இல்லாத போதிலும் வாடகை இடத்தில் தொடங்கி அந்நிறுவனத்தை அம்பானியே வாங்க ஆசைப்படும் உயர்வுக்கு உயர்த்தியுள்ளார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் வி.எஸ்.எஸ். மணி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின்னர் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றினார். தனது குடும்பத்தை பராமரிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக இந்த வேலையை செய்தார்.
ஆனால் அவரது இலக்கு சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக வேண்டும் என்பதுதான். 1989ல் AskMe என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஆனால் தோல்வியில் முடிவடைந்தது. 1992ல் திருமண திட்டமிடலுக்காக ஒரு பத்திரிகையை தொடங்கினார். அதுவும் இறுதியில் தோல்வியை பரிசாக கொடுத்தது.
பின்னர் தொலைபேசி டைரக்டரி மற்றும் எல்லோ பேஜ்ஐஸுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். இது அவருக்கு ஜஸ்ட் டயல் என்ற மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பின்பு தனது தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மனைவி கொடுத்த நகைகளை மூலதனமாக போட்டு ஜஸ்ட் டயல் நிறுவனத்தை தொடங்கினார்.
ஆன்லைன் டைரக்டரியை தயாரித்தார், ஜஸ்ட் டயல் நிறுவனம் உணவகங்கள், ஹோட்டல்கள், கடைகள், மெக்கானிக் மற்றும் எல்க்ட்ரீஷியன்கள் போன்ற வணிகங்களுக்கான தொடர்பு தகவலை கண்டுபிடிப்பதை அனைவருக்கும் எளிதாக்கியது. வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான தொடர்பை இந்நிறுவனம் எளிதாக்கியது.
ஜஸ்ட் டயல் ஆரம்பத்தில் ஒரு தொலைபேசி சேவையாக இருந்தது. தொலைப்பேசி இணைப்பை பெறுவதற்கான இணைப்பை எளிதாக்கிய 1996ல் கொண்டு வரப்பட்ட தொலைப்பேசி தாராளமயமாக்கல் கொள்கையை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். லேண்ட்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை உயர உயர ஜஸ்ட் டயல் நிறுவனமும் வளர்ந்தது.
வி.எஸ்.எஸ். மணி நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் 2013 மே மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்டினார். இதனையடுத்து ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகளின சந்தை மதிப்பு அப்போது ரூ.4,000 கோடியாக மதிப்பிடப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வாங்க விரும்பும் அளவுக்கு ஜஸ்ட் டயல் வர்த்தகம் வெற்றியடைந்தது. 2021ல் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை ரூ.3,497 கோடிக்கு கையகப்படுத்தியது.
இதில் வி.எஸ்.எஸ். மணிக்கு அவரது 41 சதவீத பங்குகளுக்காக ரூ.1,332 கோடியை ரிலையன்ஸ் ரீடெய்ல் கொடுத்தது. எஞ்சிய ரூ.2,165 கோடிக்கு புதிய பங்குகளை வாங்கியது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானி வாங்கி விட்டாலும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5,983 கோடியாக உள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications