உலகமே தற்போது ஏஐ, செமிகண்டக்டர் சிப் போட்டிப்போட்டு வரும் வேளையில், பல்வேறு ஆய்வறிக்கைகள் உலகின் அடுத்த பெரிய நெருக்கடி உணவுப் பொருட்களில் ஏற்படும் எனக் கணித்துள்ளது. ஆனால் சீனா, இதற்கு முன்கூட்டியே தாயாராகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
உலக நாடுகளில் அதிகரிக்கும் போர், போர் மூலம் ஏற்படும் சப்ளை செயின் பாதிப்பு, விவசாய உரம் தட்டுப்பாடு, கடுமையான பருவநிலை மாற்றம், மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வறுமை குறியீடு ஆகியவை உலகில் பெரும் உணவு நெருக்கடி வரும் எனக் கணித்துள்ளது.

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர்ந்து 4F crisis-ஐ நினைவூட்டி வருகிறார், அதாவது உணவு, எரிபொருள், விவசாய உரம், நிதி பிரச்சனைகள் அதிகரித்து வருவதை சுட்டி காட்டி வருகிறார்.
இந்தியாவில் எல் நினோ பாதிப்பு காரணமாக உணவு பொருள் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்து வரும் வேளையில், சீனா எப்படி இந்த Food Crisis-ஐ சமாளித்து வருகிறது..?
உலகளவில் ஏற்படப்போகும் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்கச் சீனா இப்போதே உணவுப் பொருட்களைச் சேமிக்கத் துவங்கியுள்ளது. மேலும் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் சோளத்தில் 60 சதவீதமும், அரிசியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், கோதுமையில் 44 சதவீதமும் சீனா கன்ட்ரோல் செய்து வருகிறது.
குறிப்பாக அரசி உற்பத்தி சீனா கடுமையான சட்ட திட்டத்தை வைத்துள்ளது. ஜீ ஜின்பிங் அரசின் முக்கிய உத்தரவு என்னவென்றால் சீனாவுக்குத் தேவையான அரிசியை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்பது தான். இதற்காக 120 மில்லியன் ஹெக்டர் விளை நிலங்களை அரசிக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த 120 மில்லியன் ஹெக்டர் நிலம் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்படாது.
அடுத்தாக இந்தியாவுக்கு எப்படி முட்டை முக்கியமான ப்ரோடீன் ஆக விளங்குகிறதோ, சீனாவுக்கு பன்றிக்கறி என்பது முக்கியமான ப்ரோடீன். உலகில் தயாராகும் பன்றிக் கறியில் சீனா மட்டுமே 50 சதவீத பங்கை உட்கொள்கிறது. இதனால் உலக நாடுகள் எப்படி கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கிறதோ, அதேபோல் சீனா பன்றி மற்றும் பன்றிக் கறியைப் பல வகையில் சேமித்து வருகிறது.
இதேபோல் பன்றிகளின் முக்கிய உணவாக இருக்கும் சோயாபீன்-களை சீனா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. உதாரணமாக உலகில் வர்த்தகமாகும் 60 சதவீத சோயாபீன் சீனாவுக்கு செல்கிறது. பல வருடங்களாக அமெரிக்காவில் இருந்து தான் சோயாவை சீனா வாங்கி வந்தது, ஆனால் வர்த்தக போருக்கு பின்பு அமெரிக்காவை அப்படியே விட்டுவிட்டு பிரேசிலிடம் இருந்து வாங்கி வருகிறது. தற்போது சீனாவுக்கு தேவையான மொத்த சோயாபீன் தேவையில் பிரேசில் 75 சதவீதமும், அமெரிக்கா வெறும் 15 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்து வருகிறது.
உலக நாடுகள் தற்போது விவசாய உரங்களுக்காகத் தடுமாறி வரும் வேளையில் சீனா உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்தவும், எதிர்வரும் உணவு நெருக்கடியிலிருந்து தப்பிக்கவும் phosphate ஏற்றுமதியை முடக்கியுள்ளது.
இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் உணவு பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தி உணவு நெருக்கடியில் இருந்து தப்பித்து வருகிறது சீனா.
ஆனால் இந்தியாவில் இன்னுமும் 60 சதவீத சமையல் எண்ணெய்யை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம், யூரியா உற்பத்தி தளங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மூலம் இயங்குகிறது. இதன் வாயிலாக விவசாய பொருட்கள் உற்பத்தியில் இருந்தே விலை உயர்கிறது.


Click it and Unblock the Notifications

