கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்: இன்சூரன்ஸ் இல்லையெனில் பெட்ரோல், டீசல் கிடையாதா?

இந்தியாவில் கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு இன்சூரன்ஸ் போட்டிருப்பது கட்டாயம். குறிப்பாக மூன்றாம் தரப்பு காப்பீடு இருப்பது அவசியம். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இதனை பின்பற்றுவதே இல்லை. இந்த சூழலில் வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் போடுவதை உறுதிப்படுத்த சில கெடுபிடிகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமலேயே இயக்கப்படுகின்றன. அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மொத்த வாகனங்களில் சுமார் 81 சதவீதம், அதாவது சுமார் 25 கோடி வாகனங்கள் மட்டுமே செல்லுபடியாகும் இன்சூரன்ஸை கொண்டுள்ளன.

கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்: இன்சூரன்ஸ் இல்லையெனில் பெட்ரோல், டீசல் கிடையாதா?

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மூன்றாம் நபர் வாகன காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஒரு வாகனத்தால் மற்றொரு நபருக்கு காயம், உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்படும்போது, பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த காப்பீடு நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

Also Read

ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் விபத்தில் சிக்கினால், பாதிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் உரிய இழப்பீட்டை பெறுவதில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். முன்னதாக இந்திய சாலைகளில் இயங்கும் அனைத்து வாகனங்களும் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் அரசு சில பரிந்துரைகளை ஆய்வு செய்து வருகிறது. இதன்படி, அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிப்பது. அதாவது உங்கள் வாகனம் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களில் சிக்கியிருந்தால், நீங்கள் இன்சூரன்ஸுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மறுபுறம், போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஒப்பீட்டளவில் குறைவான பிரீமியம் சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது. இது பரிந்துரை தானே தவிர இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

Recommended For You

அடுத்ததாக ஒவ்வொரு ஆண்டும் வாகன இன்சூரன்ஸை புதுப்பிப்பதில் உள்ள சிரமங்களை குறைப்பதற்கான வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. இதன்படி, கார்களுக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஆறு ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான நீண்ட கால இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்த ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படுவதை தடுக்கும் பரிந்துரையும் பரிசீலனையில் இருக்கிறதாம். இதற்காக, பெட்ரோல் பங்குகளில் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார கேமராக்கள் (ANPR) பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்து, அதன் இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறையில் உள்ளதா என்பதை உடனடியாக சரிபார்க்கும்.

அதில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கும்போது கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், இது தற்போது பரிசீலனையில் தான் இருக்கிறது. இன்னும் சட்டமாக நடைமுறைக்கு வரவில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+