தமிழ்நாட்டில் நேற்று குறைந்த தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த வாரத்தில் 4 வர்த்தக நாட்களில் 3 நாட்கள் தங்கம் விலை உயர்ந்துள்ளது, ஒரு நாள் மட்டும் விலை சரிந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 120 ரூபாய் விலை கூடி 11,540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 960 ரூபாய் விலை உயர்வு கண்டு 92,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த திங்கள் ,செவ்வாய் என தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாயும், சவரனுக்கு 2000 ரூபாயும் விலை உயர்ந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 295 ரூபாயும் சவரனுக்கு 2,360 ரூபாயும் விலை சரிந்தது. ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் 92,320 ரூபாயாக உள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,589 ரூபாய்க்கும் 10 கிராம் 1,25,890 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,445 ரூபாய்க்கும் ஒரு சவரன் 75,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 260 ரூபாயும் கிலோவுக்கு 2.60 லட்சம் ரூபாயும் விலை குறைவில் தான் இருக்கிறது.
அமெரிக்க பணவீக்க தரவுகள் நேற்று மாலை வெளியாகின, 2%ஆகவே பணவீக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டநிலையில் அதனை விட அதிகரித்து 3.8%ஆக உள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ளதால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்பு என்பது அதிகமாகியுள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கம் விலை இன்னும் குறைய தொடங்கியது. உலக சந்தையில் நேற்று இரவு ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 3,427 அமெரிக்க டாலர்கள் என சரிந்தது. ஆனால் அதன் பின் தங்கம் விலை மீண்டு வந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,576 டாலர்களாக தற்போது வர்த்தகமாகி வருகிறது. உலக சந்தையில் தங்கம் விலை இன்று காலை உயர்ந்திருப்பதே தமிழ்நாட்டில் விலை உயர காரணம்.
அடுத்த மாதம் 8ஆம் தேதி அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடக்கிறது. இதில் வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் மேற்கொண்டு தங்கம் விலையை தீர்மானிக்கும், வட்டி உயர்ந்தால் தங்கம் விலை சரியும். தற்போது வட்டி உயர்த்தப்படும் என்ற கணிப்பில் தான் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தான் டிசம்பர் முதல் தங்கத்தின் பாதையை முடிவு செய்யும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

