வெளிநாட்டில் வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என்பது இந்திய மக்களின் மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது, இதனாலேயே படிப்பு, வேலை, வர்த்தகம் என எப்படியாது யுஎஸ், யுகே-வில் செட்டிலாகி விட வேண்டும் என 90களில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.
இந்த பயணத்தில் பெரும்பாலானவர்களுக்கு பெரும் வெற்றியும், வாழ்க்கையும் கிடைத்த நிலையில் ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் செட்டிலாகும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளுக்காக தான் இந்தியர்கள் படையெடுத்தனர், ஆனால் தற்போது ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளுக்கும் செல்ல துவங்கியுள்ளனர்.
ஆனால் அமெரிக்காவும் சரி, பிரிட்டன் அரசும் சரி அடுத்தடுத்து விசா விதிமுறைகளை கடுமையாக்கி வரும் காரணத்தால் யுஎஸ், யுகே-வில் பணியாற்றுவோர், படிப்பை முடித்தோர் என எவ்விதமான என பலர தாய் நாட்டிற்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
உதாரணமாக பிரிட்டன் அரசு கடந்த 2 வருடத்திஸ் 2 முறை விசா விதிகளை கடுமையாக்கியுள்ளது. இதில் முக்கியமாக திறமையானர்களுக்கு பிரிட்டன் நாட்டில் பணியாற்ற கொடுக்கப்படும் விசாவிற்கான அடிப்படை சம்பள அளவீட்டை 2024ல் 35,409 டாலராக இருந்த நிலையில் 2025 ஏப்ரல் மாத்தில் 52,303 டாலராகவும் ஜூலை மாதத்தில் 56,358 டாலராகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் விசா விண்ணப்ப கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பிரிட்டன் நாட்டின் பல்கலைகழகத்தில் படிப்பை முடித்து எளிதாக வேலை பெற்ற காலம் மாறி மிகவும் திறமையான அதிக சம்பளம் பெறக்கூடிய நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
அப்படி கிடைத்தாலும் விசா ஸ்பான்சர்ஷிப் கொடுப்பது நிறுவனங்களுக்கு பெரும் நிதி சுமையாக இருந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு மாணவர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கி வருகிறது.
இதன் எதிரொலியாக படித்து முடிந்து வேலைதேடும் பல இந்திய மாணவர்கள் தற்போது ஊரை காலி செய்துவிட்டு தாய் நாட்டிற்கு வர துவங்கியுள்ளனர்.
பிரிட்டனில் தான் இப்படி என்றால் அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசம், டிரம்ப் அரசு ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில், புதிதாக ஒரு மசோதா ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஹெச்1பி விசா உரிமையாளர்கள் வேலையில்லாமல் 60 நாட்கள் அமெரிக்காவில் வசித்து வேறு வேலையை தேடும் வாய்ப்பு அளிக்கும் விதியை ரத்து செய்வது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால் பெரும் நெருக்கடி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் தற்போது அமெரிக்க நிறுவனங்களில் அதிகப்படியான பணிநீக்கம் நடந்து வரும் வேளையில், பணிநீக்கம் அறிவிப்பு வந்த அடுத்த நொடி அலுவலைகத்தை விட்டு வெளியேறுவதை தாண்டி, நாட்டை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகும்.
இத்தகைய உறுதியற்ற நிலை நீடிக்கும் போது அமெரிக்காவில் விசாவில பணியாற்றி வரும் இந்தியர்களின் நுகர்வின் அளவு பெரிய அளவில் குறையும், குறிப்பாக கார், வீடு, பொருட்களை வாங்குவது போன்றவை அதிகளவில் குறையும். இதனால் அமெரிக்காவின் வர்த்தகமும் பாதிக்கும்.
இப்படி இந்தியர்களுக்கு யுஎஸ், யுகே என சுத்தி சுத்தி நெருக்கடிகள் உருவாகும் காரணத்தால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications


