காத்திருக்கும் டைம்பாம்.. 92 டாலரை நெருங்கிய கச்சா எண்ணெய்.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன?

கச்சா எண்ணெய் விலை இந்த வார துவக்கத்தில் இருந்து அதிரடியாக உயர துவங்கியுள்ளதற்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்கா - ஈரான் மத்தியில் மீண்டும் துவங்கிய போர் தாக்குதல். கிட்டதட்ட ஒரு மாத காலம் அமைதியாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை அமெரிக்காவின் தாக்குதல் மூலம் மீண்டும் ஈரான் பதில் தாக்குதலை துவங்கியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான போர் 7 மாதங்களை தொட்டு உள்ளது.

இதன் விளைவாக திங்கட்கிழமை 91 டாலர் வரையில் உயர்ந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று 92 டாலர் வரையில் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.

காத்திருக்கும் டைம்பாம்.. 92 டாலரை நெருங்கிய கச்சா எண்ணெய்.. அமெரிக்காவின் அடுத்த ஆக்ஷன் என்ன?

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான தாக்குதல் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும், இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி உயர்ந்துவதற்கான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் உருவாகும். இதனால் பத்திர முதலீட்டு சந்தையிலும் முதலீடு அதிகரிக்கும்.

இந்த இரண்டு முக்கிய சிக்னலும் முதலீட்டு சந்தைக்கு மிகவும் ஆபத்தானது குறிப்பாக இந்திய பங்குச்சந்தைக்கு. ஏற்கனவே நிஃப்டி குறியீட்டில் இருக்கும் 47 நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதன் உச்ச விலையில் இருந்து ஒப்பிடும் போது சுமார் 49 லட்சம் கோடி அளவிலான இழப்பில் தத்தளித்து வரும் வேளையில் தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

இன்றைய கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் வர்த்தக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 0.87 சதவீதம் உயர்ந்து 91.28 டாலராக உள்ளது. இதுவே WTI கச்சா எண்ணெய் விலை 1.19 சதவீதம் உயர்ந்து 86.78 டாலராக உள்ளது.

கடந்த ஒரு மாதமாக ஈரான் - ஓமான் ஆகிய நாடுகள் இணைந்து ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக கைப்பற்றி நிர்வாகம் செய்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் அமெரிக்காவின் திடீர் தாக்குதல் துவங்கியுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலர் அளவீட்டை எட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Recommended For You

இதேவேளையில் டிரம்ப் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்க கடற்படை உதவியுடன் எண்ணெய் கப்பல் இயக்க உதவும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது தினமும் அமெரிக்க பாதுக்காப்பில் 30 கப்பல்கள் ஹார்முஸ் வழித்தடத்தில் செல்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப், இதனாலேயே கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை உயரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரான் அனுமதியில்லாமல் சென்ற கப்பல்கள் கன்னிவெடி மூலம் பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் Bandar Abbas பகுதியில் ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இவ்வழியில் செல்லும் கப்பல்கள் அனுமதி பெற்று ஈரான் - ஓமான் உருலாக்கிய வழித்தடத்தில் தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் டிரம்ப் கூறுவது நம்பதன்மையான விஷயமாக இல்லை என கருத்து நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+