ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த நவராத்திரி, தசரா காலத்தில் ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒரு ஸ்கூட்டரை செய்துள்ளது.

சமீபகாலமாக மின்சார வாகனங்கள் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் பயணிக்கலாம், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்பதால் மக்கள் மின்சார வாகனங்களை நாட தொடங்கி விட்டனர். வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்கள் விற்பனை சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக இரு சக்கர மின்சார வாகனங்கள் விற்பனை அதிகமாக உள்ளது. நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்புகளில் ஒன்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 Pro, S1 Air, மற்றும் S1X ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் நவராத்திரி, தசரா பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் Bharat EV Fest என்ற பண்டிகை விற்பனையை அறிவித்தது. கடந்த 16ம் தேதியன்று இந்த பண்டிகை கால விற்பனையை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியது. Bharat EV Fest-ன் கீழ், அனைத்து புதிய S1 Pro-2nd Gen ஸ்கூட்டருக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பேட்டரிக்கு ஐந்து வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்குகிறது. ரூ.10 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளில், ரூ.7,500 உடனடி தள்ளுபடி போன்றவற்றையும் ஓலா எலக்ட்ரிக் வழங்குகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு டெஸ்ட் ரெய்டு திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு அதிர்ஷ்ட வாடிக்கையாளருக்கு Ola S1X+ இலவசமாக வழங்குகிறது. ஜீரோ டவுன்பேமெண்ட் போன்ற கவர்ச்சிகரமான நிதி சலுகைகளையும் ஓலா எலக்ட்ரிக் அறிவித்தது. இதன் எதிரொலியாக இந்த நவராத்திரி பண்டிகை காலத்தில் ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நவராத்திரி, தசரா காலத்தில் ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒரு ஸ்கூட்டரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் செய்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறுகையில், இந்த நவராத்திரி மற்றும் தசராவில் எங்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது. நிறுவனம் இப்போது ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு ஸ்கூட்டர் விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5 மடங்குக்கும் அதிகமாக ஸ்கூட்டர்கள் விற்பனையானது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications