இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தங்கம் வாங்கப் பல புதிய வழிகள் வந்துள்ளது. அந்த வகையில் இன்று கோடிக்கணக்காக இளைஞர்கள் எவ்விதமான பிரச்சனையும் சந்தேகமுமின்றித் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவது வாடிக்கையாக மாற்றிவிட்டது.
இந்தியாவிலும், இந்தியர்கள் மத்தியிலும் தங்கம் மீதான தாகம் என்றும் தீராது என்பதை உண்மையாக்கும் விதமாக இந்திய மக்கள் தற்போது நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் பல டன் தங்கத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைனில் அதாவது டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவோருக்குத் தாங்கள் வாங்கித் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், எவ்விதமான பயமும், அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக MMTC-PAMP அமைப்புப் புதிதாக ஒரு Gold accumulation திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் கோல்டு
இந்தியாவில் தற்போது தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்கும் சேவை பல முன்னணி ஈகாமர்ஸ், பேமெண்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மொபைல் வேலெட் சேவை தளங்களான பேடிஎம், போன்பே போன்ற தளத்தில் Stock Holding Corporation of India அமைப்பின் கோல்டு ரஷ் திட்டத்தின் மூலம் தங்கம் வங்க முடியும்.
அப்படி நீங்கள் வாங்கும் டிஜிட்டல் தங்கம் பெரும்பாலும் MMTC-PAMP அல்லது SafeGold அமைப்பின் கீழ் தான் வாங்கப்படுகிறது.
Gold accumulation திட்டம்
இந்நிலையில் MMTC-PAMP அமைப்பு டிஜிட்டல் முறையில் வாங்கும் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், எவ்விதமான பயமும், அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக Gold accumulation திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
1000 ரூபாய்
இப்புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் ஒருவர் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் தங்கம் வாங்க முடியும். வாங்கப்பட்ட தங்கம் MMTC-PAMP அமைப்பின் லாக்கரில் முழு இன்சூரன்ஸ் உடன், பாதுகாக்கப்படும்.
இந்தச் சேவைக்கு MMTC-PAMPஅமைப்புக்கு வாடிக்கையாளர் எவ்விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.
கணக்கு
இந்த Gold accumulation திட்டத்தின் சேவைகளைப் பெற வாடிக்கையாளர் முதலில் மெட்டல் அக்கவுன்ட்-ஐ திறக்க வேண்டும். இதற்கு MMTC-PAMP அல்லது SafeGold அமைப்பின் பதிவு முறையைப் பின்பற்ற வேண்டும்.
மேலும் வாங்கிய தங்கத்தை எப்போதும் வேண்டுமானாலும் காயின்களாகவோ, அல்லது பார்களாகவோ, பகுதி பகுதியாக எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம்.
தூய தங்கம்
MMTC-PAMP மற்றும் SafeGold கீழ் வாங்கப்படும் தங்கம் அனைத்தும் 99.99 சதவீத தூய தங்கம். இத்தளத்தில் வருடத்தின் 365 நாட்களும், வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் தங்கத்தை வாங்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
தங்க விற்பனை
மேலும் தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் தங்க விற்பனை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் மற்றும் தங்க நகைகளின் விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்காக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு அக்டோபர் மாதம் 35.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications