மணப்பாறைனா முறுக்கு மட்டும்னு நினைச்சீங்களா? இனி மணப்பாறையோட அடையாளமே மாற போகுது..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை என்றாலே அனைவருக்கும் அங்கே தயாரிக்கும் முறுக்கு தான் நினைவுக்கு வரும். இனி மணப்பாறை என்றால் முறுக்கு மட்டுமல்ல லேஸ் (Lay's), குர்குரே (Kurkure) போன்ற சிப்ஸ் வகைகளும் நமது நினைவுக்கு வரும். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதிய உணவு உற்பத்தி ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறது பெப்சிகோ இந்தியா.

மணப்பாறை சிப்காட்டில் 868 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்ட பெப்சிகோ இந்தியா நிறுவனம் அதற்காக உணவு உற்பத்தி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது. மணப்பாறையில் உள்ள கண்ணுடையான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில், சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் பிரபல லேஸ் மற்றும் குர்குரே ஆகியவை தயாரிக்கப்படும்.

மணப்பாறைனா முறுக்கு மட்டும்னு நினைச்சீங்களா? இனி மணப்பாறையோட அடையாளமே மாற போகுது..!!

தென்னிந்தியாவில் தனது விநியோக கட்டமைப்பை இந்த ஆலை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள பெப்சிகோ இந்தியா தென்னிந்தியாவில் தங்களின் முக்கியமான ஆலையாக இது படிப்படியாக மாறும் என கூறியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5,700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய போவதாக கடந்த மே மாதம் பெப்சிகோ இந்தியா அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆலையின் மூலம் சுமார் 750 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் பாசிடிவாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். பேக்கேஜிங் , லேமினேட்ஸ் ,அட்டைப்பெட்டிகள் , பயோமாஸ் மற்றும் பிற துணை துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் துணை தொழில்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக இந்த ஆலை வழிவகை செய்யும்.

Also Read

தமிழ்நாடு அரசின் தொழில்துறை துறை அமைச்சர் கீர்த்தனா மணப்பாறையில் பெப்சிகோ இந்தியாவின் புதிய உற்பத்தி ஆலையை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியாகும். தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தி சூழலின் மீது உலகளாவிய நிறுவனங்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கையையும், பெரும் நகரங்களை தாண்டி மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தொழில்துறை வளர்ச்சியை கொண்டு செல்லும் அரசின் உறுதியையும் இந்த முதலீடு பிரதிபலிக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

பெப்சிகோ இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக்ருத் கோடேச்சா தென்னிந்தியா, பெப்சிகோவுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த முதலீடு இப்பகுதிக்கான எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்த ஆலை சுமார் 650 நேரடி மற்றும் மறைமுக இதை வெறும் உற்பத்தி திறனில் செய்த முதலீடாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பாகவும் நாங்கள் பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+