புது கார் வாங்குகிற ஆசையை விட்டுங்க.. மாருதி சுசூகியின் 4வது முறை விலை உயர்வு.. அதிர்ந்த கார் லவ்வர்ஸ்!

இந்தியாவில் பணவீக்கத்தின் தாக்கம் உணவுப் பொருட்களைத் தாண்டி உற்பத்தித் துறையிலும் வேகமாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் அடுத்தடுத்து நிறுவனங்கள் தங்களுடைய கார் விலைகளை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி அதிகரிக்கும் உற்பத்தி விலைகளைச் சமாளிக்க முடியாமல் 4வது முறையாகத் தனது முக்கிய தயாரிப்புகளின் விலையை விற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புது கார் வாங்குகிற ஆசையை விட்டுங்க.. மாருதி சுசூகியின் 4வது முறை விலை உயர்வு.. அதிர்ந்த கார் லவ்வர்ஸ்!

இன்று பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் உற்பத்தி விலை உயர்வை சமாளிக்க முக்கிய தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனத்தில் செலவின குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் குறிப்பிட்ட செலவின பங்கை விலை உயர்வு மூலம் சமாளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் புதிய கட்டணம் நவம்பர் 22ஆம் தேதி முதல் புதிய கட்டண உயர்வு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Also Read

இந்த முறை மாருதி சுசூகி அனைத்து கார்களின் விலையை மொத்தமாக உயர்த்தாமல் குறிப்பிட்ட கார்களின் விலையை மட்டுமே உயர்த்துவதாக அறிவித்துள்ளது, இதேபோல் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் எந்த கார்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பதை தெரிவிக்கவில்லை.

மாருதி சுசூகி இதற்கு முன்பு ஜூன் மாதம் செய்த விலை உயர்வில் 30000 ரூபாய் வரையில் உயர்த்தியது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 30000 ரூபாய் வரையில் அதிகரித்தது.

Recommended For You

இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலை உயர்வில் மொத்தமாக அனைத்து கார்களின் விலையை உயர்த்தாமல் குறிப்பிட்ட சில கார்களின் விலையை 20000 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட விலை உயர்வும் இதேபோல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 2026ஆம் நிதியாண்டில் மட்டும் மாருதி சுசூகி கிட்டத்தட்ட 4 முறை விலையை உயர்த்தியுள்ளது. புத்தாண்டு, பொங்கல் விற்பனை துவங்குவதற்கு முன்பு விலை உயர்வு அறிவிக்கப்பட்டது மூலம் பண்டிகை கால தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும், விலை உயர்வு மூலம் செலவுகளின் சுமையைக் குறைக்க உதவும்.

ஈரான் போர் காரணமாக அனைத்து பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, இதேபோல் போக்குவரத்து கட்டணம், மின்சார கட்டண உயர்வு, உலோகத்தின் விலை உயர்வு, இதர உற்பத்தி செலவுகளை மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் மூலம் தொடர்ந்து செலவினங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கார், பைக் தயாரிப்பு நிறுவனங்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+