AI யூஸ் பண்ணுங்க.. இல்லனா வேலையை விட்டு போங்க: தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது சிக்கல்..!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம பலரது வேலைகளையும் படிப்படியாக பறித்து வருகிறது. பெரும்பாலான துறைகளில் ஏஐ அன்றாடம் பயன்படுத்தும் கருவியாக மாறிவிட்டது. இந்த சூழலில் ஊழியர்கள் தங்கள் அன்றாட வேலைகளில் ஏஐ பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்யப்படுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலிகான் லேப்ஸ் (Polygon Labs) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் போய்ரான் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது சொந்த வேலைகளை தாங்களே ஆட்டோமேட் செய்ய வேண்டும் என்றும், ஏஐ செய்யக்கூடிய வேலைகளை ஒப்படைக்க மறுப்பவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AI யூஸ் பண்ணுங்க.. இல்லனா வேலையை விட்டு போங்க: தனியார் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது சிக்கல்..!!

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவிட்டுள்ள அவர், என்னுடைய நிறுவனம் முழுவதும் ஒரு தெளிவான அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறேன், உங்கள் வேலையை ஏஐ மூலம் தானியக்கமாக்க முடியும் என்ற நிலையில், அதை செய்ய நீங்கள் மறுத்தால், உங்கள் வேலைக்கு தான் ஆபத்து என கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து கோடிக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்க்ளின் நிலைமையை எடுத்து காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. தற்போது ஊழியர்கள் ஏஐ மூலம் வேலை பறி போகும் என்ற நிலை இருந்தாலும் அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Also Read

இதற்கிடையே மார்க் போய்ரான் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பல பயனர்களிடமிருந்து விமர்சனங்களை பெற்றுள்ளது. நிறுவனங்கள் ஊழியர்களை வைத்தே அவர்களின் கண்களையே குத்த செய்கின்றன என கருத்து தெரிவித்துள்ளனர். பணி பாதுகாப்பு குறித்து கவலைப்படும் ஊழியர்களிடம் தலைமை செயல் அதிகாரி உணர்ச்சியற்ற முறையில் நடந்துகொள்வதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் மார்க் போய்ரான் தங்களது பொறுப்புகளை வெற்றிகரமாக தானியக்கமாக்கும் ஊழியர்கள் நிறுவனத்திற்கு இன்னும் அதிக மதிப்புமிக்கவர்களாக மாறுவார்கள் என்றும், மற்ற பணிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு கணிசமாக அதிக ஊதியம் வழங்க பாலிகான் தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

தற்போதுள்ள பொறுப்புகளை ஏஐ வசம் கொடுத்து விட்டு ஊழியர்கள் என்ன செய்வார்கள் என ஒரு பயனர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போய்ரான், செய்வதற்கு லட்சக்கணக்கான விஷயங்கள் உள்ளன என கூறியுள்ளார். மறுபுறம், சில பயனர்கள் இந்த கருத்தை ஆதரித்துள்ளனர். மீண்டும் மீண்டும் செய்யப்படும் சலிப்பூட்டும் வேலைகளிலிருந்து ஊழியர்களை விடுவித்து, முக்கியமான திட்டங்களில் கவனம் செலுத்த அதிக நேரத்தை ஏஐ வழங்கும் என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+