நம்ம ஊரு மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம், கச்சா எண்ணெய், தொலைத்தொடர்பு, ரீடெய்ல் என பல துறைகளில் வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கிறது. மேலும் வர்த்தக வாய்ப்புள்ள புதுப்புது துறைகளிலும் துணிந்து முதலீடு செய்து ரிலையன்ஸின் வர்த்தக சாம்ராஜ்யத்தை முகேஷ் அம்பானி விரிவுப்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் அவர் வளர்ச்சி காணும் அதேவேளையில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது என்பதும் உண்மை. முகேஷ் அம்பானி தற்போது மேற்கு வங்கத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 7வது சர்வதேச வணிக உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி பேசுகையில் கூறியதாவது: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மேற்கு வங்கத்தில் ரூ.45,000 கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொலைத்தொடர்பு, சில்லரை மற்றும் பயோ எரிசக்தி ஆகிய 3 துறைகளிலும் அதிக அளவு முதலீடு செய்யப்படும்.
ஜியோ பைபர் மற்றும் ஏர் பைபர் சேவைகளை சீக்கிரமாக அமல்படுத்துவதன் மூலம், மேற்க வங்கத்தில் ஒவ்வொரு வீடும் மிக விரைவில் ஸ்மார்ட் வீடுகளாக மாற்றப்படும். மேற்கு வங்கத்தில் இந்த மாற்றம் புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கும். நாங்கள் மாநிலத்தில் 98.8 சதவீதம் மக்கள்தொகை கவரேஜை அடைந்துள்ளோம் மற்றும் கொல்கத்தா டெலிகாம் வட்டத்தில் 100 சதவீத கவரேஜை எட்டியுள்ளோம்.
தற்போது எங்களது சில்லரை கடைகளின் எண்ணிக்கை 1,000ஆக உள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 1,200க்கு மேல் விரிவடையும். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாக இந்தியாவின் மிகப்பெரிய பயோ எரிசக்தி தயாரிப்பாளராக ரிலையன்ஸ் குழுமம் மாறியுள்ளது.
விவசாயிகளுக்கு எரிசக்தி தோட்டங்களை (எரிபொருள் உற்பத்திக்கு பயன்படும் பயிர்கள், மரங்கள்) பெரிய அளவில் வளர்க்க நாங்கள் உதவுவோம். இது கிட்டத்தட்ட 20 லட்சம் டன் கார்பன் உமிழ்வைத் தணிக்க உதவும் மற்றும் ஆண்டுக்கு 25 லட்சம் டன் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும்.
மேற்கு வங்கத்தில் சி.பி.ஜி. ஆலைகளை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது உணவு மற்றும் எரிசக்தி உற்பத்தியாளர்களாக மேற்கு வங்க விவசாயிகளை இரட்டிபாக்குவதன் மூலம் அவர்களது வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த 3 வணிகங்களில் எங்கள் தற்போதைய மற்றும் புதிய முதலீடுகளுடன், பகிரப்பட்ட செழிப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, ஒன்றிணைந்த மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின எதிர்காலத்தை நோக்கி மேற்கு வங்க மக்களுடன் ரிலையன்ஸ் முன்னேறி செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications