இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரீடைல் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே பல பரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் சமீபத்தில் FMCG துறையில் இறங்கி பெரும் தாக்கத்தை இந்திய ரீடைல் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்க குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக கோலா உட்பட 3 சுவைகளில் பல அளவுகளில் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனித்தனியாக ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. ரிலையன்ஸ் ஜியோ மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் சுமார் 13 சதவீதம் உயர்ந்து 4,716 கோடியாக அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய வர்த்தக பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் மார்ச் காலாண்டில் 2415 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டின் 2139 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும்.
மேலும் 2023 ஆம் நிதியாண்டு முழுவதும் ரிலையன்ஸ் ரீடைல் 9181 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது, இது கிட்டதட்ட 1.1 பில்லியன் டாலராகும். ஈஷா அம்பானியின் அதிகப்படியான தலையீட்டில் தான் ரிலையன்ஸ் ரீடைல் இயங்குகிறது குறிப்பிடுகிறது.
மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் வருவாய் 21 சதவீதம் அதிகரித்து 61,559 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டில் 50,834 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்காலாண்டில் மளிகை பொருட்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் அதிகப்படியான வருவாய் வளர்ச்சி பதிவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் சுமார் 15000த்திற்கும் அதிகமாக கடைகளை வைத்துள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 966 புதிய கடைகளை திறந்து சுமார் 219 மில்லியன் வாடிக்கையாளர்களை தனது கடைக்குள் ஈர்த்துள்ளது. மார்ச் காலாண்டில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிஸ் பிரிவு சுமார் 35 சதவீத அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவு 19 சதவீத அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications