இந்தியாவில் தங்கம் (Gold) விலை உயர்ந்து வருவதால் தங்க நகை வாங்கும் சாமானிய மக்களுக்கு வரும் பிரச்சனைகளை தாண்டி, தலைமுறை தலைமுறைகளாக குடும்பங்களால் நடத்தப்படும் சிறு நகைக்கடைகள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. சமீபத்தில் குஜராத் ராஜ்கோட்-ல் வெள்ளி வியாபாரிகள் செய்த டப்பா டிரேடிங் மூலம் பலர் இரவோடு இரவாக கடையை மூடியது பலருக்கு தெரியும். இதை விட மோசமான பாதிப்பு தற்போது இந்தியா முழுவதும் நிலவுகிறது, இந்த நெருக்கடி பெரிய நகை கடைகளுக்கு ஜாக்பாட் ஆக மாறி வருகிறது.
ஒருப்பக்கம் தங்கம் நகை விற்பனை அளவு 45 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தரவுகள் தெரிவிக்கிறது. தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு நகை கடைகளின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் சுமார் 3-3.5 லட்சம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நகைக்கடைகள் உள்ளன.

நடுத்தர மக்களால் இப்போது தங்கம் (Gold) வாங்க முடியாத நிலை உள்ளது, இதற்கு தங்கம் விலை உயர்வை தாண்டி, விலைவாசி உயர்வு, வருமானத்தில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை ஆகியவற்றின் மூலம் அவர்களின் வருமானம் அன்றாட செலவுகளுக்கே போதுமானதாக இல்லை என நகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் வர்த்தகம் அதிகமானது, ஆனால் அதன் பிறகு கடையில் வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. பழைய விலையில் தங்கம் வாங்கி வைத்திருந்தாலும், விலை ஏற்ற இறக்கம் காரணமாக புதிய ஸ்டாக் போட முடியவில்லை என கள நிலவரத்தை நகைக்கடை உரிமையாளர்கள் புட்டு புட்டு வைக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் தற்போது திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுக்காக மட்டும், தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் வாங்குவோரை தவிர சேமிப்புக்காக வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் தற்போது நகை கடைகளில் பெரும்பாலான வர்த்தகம் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகள் வாங்குவது தான். இதை தாண்டி தங்க காயின், பார் ஆகியவை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் நகை கடைகளுக்கான லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது.
மேலும் நகை கடைகள், வாங்கும் பழைய நகையை உருக்கி புதிய டிசைன் செய்யும்போது இழப்பு ஏற்படுகிறது எனவும் நகை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். பாலிஷ், கட்டிங், மேக்கிங் செலவுகளுடன் தங்க எடை சிறிது குறைவதால் நஷ்டம் அதிகரிக்கிறது அல்லது லாப அளவில் சிறிய அளவிலான மார்ஜின் மட்டுமே கிடைப்பதாக புலம்புகின்றனர்.
இந்தியா தங்க இறக்குமதியை சார்ந்துள்ளதால் விலை மீது எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை, சிறு வியாபாரிகளிடம் போதுமான தங்க இருப்பு இல்லாததால் புதிய ஸ்டாக் போடுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது, தற்போதைய விலை நிலவரத்தில் புதிய ஸ்டாக் போட வேண்டும் என்றால் கட்டாயம் பெரும் நிதி ஆதாரம் தேவை. வர்த்தகம், லாபம் மோசமாக இருக்கும் வேளையில் சிறிய நகை கடைகளால் நிதியை திரட்டுவது என்பது கடினமான ஒன்று.
இந்திய நகை கடை சந்தையில் சுமார் 53 சதவீத பங்கீடு இந்த அமைப்பு சாரா நகைக்கடைகள் கையில் தான் உள்ளது, தற்போதை விலை உயர்வால் இவை அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் யாரிடம் அதிகம் பணம் இருக்கிறதோ, யாரிடம் அதிக தங்க இருப்பு உள்ளதோ அவர்கள் கிங்மேக்கர்.
அப்படி பார்க்கும் போது இந்திய நகை கடை சந்தையில் பெரிய பிராண்டட் நிறுவனங்கள் தான் இன்று கிங்மேக்கர். இந்த செயின் நிறுவனங்களிடம் போதுமான தங்க இருப்பு இருக்கும், தங்கம் இருப்பு இல்லாவிட்டாலும் போதுமான நிதி ஆதாரம் இருக்கும். இதனால் வர்த்தகத்தை தொடர்ந்து எளிதாக நடத்த முடியும்.
டைட்டன் லிமிடெட்-இன் டானிஷ்க், கல்யாண் ஜுவல்லர்ஸ், சென்கோ கோல்ட் போன்ற பிராண்டட் நிறுவனங்கள் இந்த சூழலை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றன. பெரிய நகை கடைகள் டிசம்பர் காலாண்டில் 40-50 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. டானிஷ்க் இந்தியாவில் 9 காரட் நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
தங்க விலை உயர்வு மக்களை காட்டிலும், நகை கடைகளுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் வேலைவாய்ப்புகள் தற்போது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் குறைந்த எடை கொண்ட நகைகள் மற்றும் 18 காரட் லைட்வெயிட் டிசைன்கள் தேவை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி ஜெப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்றவை மளிகை கடைகளை பாதித்ததோ, தற்போது தங்கம் விலை உயர்வு மூலம் பெரிய நகை கடைகள் சிறிய நகை கடைகளுக்கு வில்லனாக மாறி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications