சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் நிலைமை தற்போது கவலைப்படும் நிலையில் உள்ளது. அந்நாடு மிகப்பெரிய மந்தநிலைக்கு செல்லும் என்று பல்வேறு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்கா சந்திக்க இருக்கும் பெரிய வீழ்ச்சியை, வாழ்நாள் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமெரிக்கர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை உலகம் முழுவதும் பிரபலமான ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிட்காயின், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தால் நீங்கள் நெருக்கடியை கடந்து பணக்காரராக வரலாம் என்று ராபர்ட் கியோசாகி கூறியுள்ளார். இது தொடர்பாக ராபர்ட் கியோசாகி சமூகவலைதளமான எக்ஸில், 2025ம் ஆண்டில் கிரெடிட் கார்டு கடன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.. வேலையின்மை அதிகரித்து வருகிறது.4,01,000 பேர் இழக்கின்றனர். ஓய்வூதியங்கள் திருடப்படுகின்றன. அமெரிக்கா ஒரு பெரிய மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும்.

நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் நான் முந்தைய எக்ஸில் கூறியது போல், வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியை பற்றி ரிச் டாட்ஸ் ப்ரோபசி என்ற புத்தகத்தில் இந்த குழப்பம் வரும் என்று மக்களை எச்சரித்தேன். அது இப்போது இங்கே உள்ளது. நான் என்னுடைய எக்ஸ் பதிவுகளில் நான் அடிக்கடி தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் வாங்குங்கள் என்று முடிக்கிறேன்.
உங்களில் சிலர் ஒரே ஆலோசனையை மீண்டும் மீண்டும் கூறுவதாக புகார் கூறி உள்ளீர்கள் . இன்றும் அதே அறிவுரையை நான் மீண்டும் சொல்கிறேன். இன்று இதில் முதலீடு செய்ய தொடங்குபவர்களுக்கு, சரிவு ஏற்படும்போது, ஒரு பிட்காயின் அல்லது தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் இந்த நெருக்கடியை கடந்து மிகவும் பணக்காரராக வரலாம், நீங்கள் இவற்றில் முதலீடு செய்ய தொடங்கினால் இன்னும் தாமதமாகவில்லை.
ஒரு ஏழை ஒரு சில அவுன்ஸ் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கினால் அல்லது பிட்காயினில் 1/2 பங்கு வாங்கினால் இந்த மந்தநிலை முடிந்தவுடன் அவர்கள் புதிய பணக்காரர்களாக மாறக்கூடும் என்று நான் கணிக்கிறேன். 2025ம் ஆண்டுக்குள் ஒரு பிட்காயின் மதிப்பு 10 லட்சம் டாலருக்கும் அதிகமாக இருக்கும், தங்கம் 30,000 டாலராகவும், வெள்ளி 3,000 டாலராகவும் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நீங்கள் இதுவரை சம்பாதித்ததிலேயே இது மிகவும் எளிதான பணமாக இருக்கும். வரவிருக்கும் பெரும் மந்தநிலை மில்லியன் கணக்கானவர்களை ஏழைகளாக மாற்றும். நடவடிக்கை எடுக்கும் ஒரு சிலர் (பிட்காயின், தங்கம், வெள்ளிகளில் முதலீடு செய்ய தொடங்கியவர்கள்) பெரும் செல்வத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கன்னா 2 லட்டு சாப்பிட ஆசையா..! போட்டி போட்டு டிவிடெண்ட் அறிவித்த எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி...
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications