5 நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி இழப்பு.. போட்டதெல்லாம் போச்சே.. கதறும் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே சரிவில் இருந்து வரும் இந்த சந்தைகள், தற்போதும் கூட சரிவில் தான் காணப்படுகின்றன.

எனினும் இன்று காலை 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டிருந்த சென்செக்ஸ், தற்போது 285.95 புள்ளிகள் குறைந்து, 57,415.52 புள்ளிகளாக காணப்படுகின்றது. இதே நிஃப்டி 85.2 புள்ளிகள் குறைந்து 17, 121 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

சிபிஐ-யிடம் சிக்கிய அனந்த் சுப்பிரமணியன்.. சென்னையில் 3 நாட்களாக துருவித் துருவி கேள்வி..!சிபிஐ-யிடம் சிக்கிய அனந்த் சுப்பிரமணியன்.. சென்னையில் 3 நாட்களாக துருவித் துருவி கேள்வி..!

இது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

ரஷ்ய - உக்ரைன் பதற்றம்

ரஷ்ய - உக்ரைன் பதற்றம்

குறிப்பாக ரஷ்ய அதிபர் உக்ரைனில் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகாங்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித் தனி நாடுகளாக அங்கீகரிப்பதாகவும் புடின் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்ய படைகள் இந்த இரு பகுதிகளிலும் அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். ஆக உக்ரைனின் எல்லைக்குள் படைகள் குவிக்கப்படலாம் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

தொடர் சரிவால் ரூ.9.1 கோடி இழப்பு

தொடர் சரிவால் ரூ.9.1 கோடி இழப்பு

இதற்கிடையில் தொடர்ந்து இந்திய சந்தைகள் பிப்ரவரி 16 முதல் சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் தான் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ஐந்து நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக பிப்ரவரி 16 அன்று இந்திய சந்தைகள் பச்சை நிறத்தில் மூடப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.

டாப் லூசர்கள்

டாப் லூசர்கள்

என்.எஸ்.இ-யிலும் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் சரிவிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா பங்குகள் டாப் லூசர்களாக உள்ளன. குறிப்பாக இந்த குறியீடுகள் முறையே 1.2% மற்றும் 2.2% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன. அதேசமயம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து 7-8bps சரிவினைக் கண்டு வருகின்றது.

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

சர்வதேச அளவில் நிலவி பதற்றமான நிலைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு, மேலும் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 97 டாலர்களை தாண்டிள்ளது. இதே தங்கத்தின் விலையானது 1900 டாலர்களையும் உடைத்துள்ளது.

நிச்சயமற்ற நிலை

நிச்சயமற்ற நிலை

தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இன்னும் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக மேற்கொண்டு விலை என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக இதன் காரணமாக இந்த திருத்தம் மீண்டும் தொடரலாம். ஆக சந்தை மேற்கொண்டு சரியலாம். இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் இன்னும் கூடுதலாக வெளியேற கூடும்.

எக்ஸ்பெய்ரி

எக்ஸ்பெய்ரி

ஆக முதலீட்டாளர்கள் சந்தை சரிவினைக் காணும் போது வாங்கலாம். அதோடு இன்னும் சில தினங்களில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றத்தில் இருந்தாலும், மீடியம் டெர்மில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மொத்தத்தில் இந்த திருத்தம் நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

russia - ukraine tension wiped out Rs.9.1 lakh crore of investors wealth within 5 days

russia - ukraine tension wiped out Rs.9.1 lakh crore of investors wealth within 5 days/5 நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி இழப்பு.. போட்டதெல்லாம் போச்சே.. கதறும் முதலீட்டாளர்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X