நம் நாட்டில் மாத சம்பளத்திற்காக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் அண்மை காலமாக பலரும் வேலையை விட்டு சுயதொழில் செய்ய போவதாக கூறுவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் மாத சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இவர்களில் யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என பார்க்கலாம்.
இந்தியாவில் மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களை விட அதிக நேரம் கடுமையாக உழைத்தபோதிலும், அவர்களின் வருமான வளர்ச்சி குறைவாகவே உள்ளதாக Periodic Labour Force Survey வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது வருமான வளர்ச்சி அடிப்படையில் மாத சம்பளதாரர்களின் வருமான வளர்ச்சி தேக்கமடைந்து விட்டது என்றும் சுயதொழில் செய்பவரின் வருமான வளர்ச்சி உயர்ந்து விட்டது என்றும் இந்த அறீக்கை சுட்டிக்காட்டுகிறது.

2025-ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, நிரந்தர ஊதியம் மற்றும் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் சராசரி மாத வருமானம் 6.1 சதவீதம் அதிகரித்து 26,247 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், சுயதொழில் செய்பவர்களின் சராசரி மாத வருமானம் 8.6 சதவீதம் உயர்ந்து 23,012 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான வருமான வளர்ச்சி விகித இடைவெளி 2.6 சதவீதமாக உள்ளது. கிடைக்கும் வருமானத்தின் படி மாத சம்பளம் வாங்குவோரின் வருமானம் அதிகமாக இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக அது பெரிய வளர்ச்சியே அடையவில்லை ஆனால் சுயதொழில் செய்பவர்களீன் வருமான வளர்ச்சி அதிகமாக உள்ளதம்.
வருமான வளர்ச்சி வேகத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுயதொழில் செய்பவர்களே முன்னிலையில் உள்ளனர். வருமான வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் மாத சம்பளதாரர்கள் பணியிடத்தில் செலவிடும் நேரம் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த முரண்பாட்டை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
சராசரி வாராந்திர வேலை நேரம் சம்பளம் வாங்குவோருக்கு 48.6 மணி நேரத்தில் இருந்து 49 மணி நேரமாக உயர்ந்துள்ளது, அதே போல சுய தொழில் செய்வோருக்கு 46.3 மணி நேரத்தில் இருந்து 47.3 மணி நேரமாக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மாத சம்பளதாரர்கள் வாரத்திற்கு சராசரியாக 49 மணி நேரம் பணியாற்றியுள்ளனர். இது சுயதொழில் செய்பவர்களை விட கிட்டத்தட்ட 3 மணி நேரம் அதிகம்.
இந்தியாவின் மாத சம்பளதாரர்கள் முன்னெப்போதையும் விட அதிக மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், அவர்களின் ஊதிய உயர்வு சுயதொழில் செய்பவர்களின் வருமான வளர்ச்சியை விட பின்தங்கியே இருக்கிறது என்பது இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. அண்மையில் கூட நிறுவனங்களின் வருமானங்கள் வளர்ந்த போதிலும் ஊழியர்களும் சம்பளம், அதற்கேற்ப வளர வில்லை என பிரதமர் மோடி பேசியது விவாதப் பொருளானது.


Click it and Unblock the Notifications

