நீங்க மிடில் கிளாஸாவே இருக்க இது தான் காரணம்..! மார்வாடிகளை பாருங்க: ரகசியம் சொல்லும் நிபுணர்..!!

இந்தியா பெரும்பாலும் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர மக்கள் நிறைந்த நாடு. இங்கே மிடில் கிளாஸ் மக்களுக்கு சம்பாதிக்கும் பணம் எங்கே மாயமாகிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் சம்பளம் வந்த உடனே அதற்கேற்ப செலவுகளுக்கே சரியாக போய்விடும். வாழ்க்கையில் நிதி ரீதியாக அடுத்த கட்டத்திற்கு செல்வதே கடினமாக உள்ளது.

மிடில் கிளாஸ் மக்கள் மிடில் கிளாஸாகவே இருக்க காரணம் என்ன என்பதை தொழில்முனைவோரும் நிதி ஆலோசகருமான பிரேம் சோனி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விவரித்துள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது. அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மார்வாடி குடும்பங்களின் வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார்.

நீங்க மிடில் கிளாஸாவே இருக்க இது தான் காரணம்..! மார்வாடிகளை பாருங்க: ரகசியம் சொல்லும் நிபுணர்..!!

ஒவ்வொரு செல்வமிக்க மார்வாடி குடும்பத்திடமும் மிடில் கிளாஸ் மக்கள் ஏற்க மறுக்கும் ஒரு மறைக்கப்பட்ட ரகசியம் உள்ளது என கூறியுள்ளார். ஏனெனில் மார்வாடி குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் வரவிருக்கும் 3 தலைமுறைகளை மனதில் கொண்டு உழைக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார். ஆனால் நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் சொந்த வசதிகளை மேம்படுத்துவதிலேயே ஈடுபட்டிருக்கிறது. அதனால்தான் நடுத்தர வர்க்கம் எப்போதும் நடுத்தர வர்க்கமாகவே இருக்கிறது என்கிறார்.

Also Read

இன்று வளமாக இருக்கும் பல மார்வாடி குடும்பங்கள், தனிப்பட்ட வசதிகளையும் வொர்க் லைஃப் பேலன்ஸையும் விட்டுக்கொடுத்து, பல தசாப்தங்களாக தங்கள் தொழில்களை கட்டமைத்த முந்தைய தலைமுறையினரால்தான் அந்த நிலையை அடைந்துள்ளன என சோனி சுட்டிக்காட்டியுள்ளார்.

பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் நிலையான வேலைவாய்ப்பு, வழக்கமான வேலை நேரங்கள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. சிறந்த சம்பளம் தரும் வேலை, ஆண்டு சம்பள உயர்வு ஆகியவற்றை கொண்டு நிதி முன்னேற்றத்தை அளவிடுகின்றன. இவை நிதி பாதுகாப்பை தந்தாலும், தலைமுறைகள் கடந்து செல்லக்கூடிய பெரிய சொத்துகளை உருவாக்காமல் போகின்றன என கூறியுள்ளார்.

ஆனால் மார்வாடிகள் அப்படி இல்லை பின்னால் வரும் தலைமுறைக்காகவும் சேர்த்து உழைப்பார்கள், 12 மணி நேரம் வேலை செய்வார்கள், குடோன்களிலேயே கிடப்பார்கள் என ஒப்பிட்டுள்ளார். ஆனால் மிடில் கிளாஸ் மக்கள் நீண்ட கால சொத்துகளை உருவாக்குவதை விட உடனடி வசதிக்கே முன்னுரிமை அளித்தால், தலைமுறை செல்வத்தை உருவாக்க முடியாது என்றும், வலுவான நிதி அடித்தளம் இல்லாதது வருங்கால தலைமுறைகளையும் முந்தைய தலைமுறையினரை போன்றே பொருளாதார வரம்புகளுக்குள் நிறுத்திவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Recommended For You

அவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.ஒரு நபர் இது மிக கடுமையான ஆனால் கசப்பான உண்மை என கூறியுள்ளார். அதே வேளையில் வழக்கமான சம்பள வேலைக்கும் சொந்த தொழிலை கட்டமைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி சிலர் கருத்து கூறியுள்ளார்.ஒரு வழக்கமான வேலையில் உங்களை வருத்திக்கொள்வது தலைமுறை செல்வத்தை உருவாக்காது,உங்கள் சொந்த தொழிலுக்காக உங்களை வருத்திக்கொள்வதுதான் அதை உருவாக்கும் என சிலர் கூறியுள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+