கவலைபடாதீங்க.. உங்க பணம் பாதுகாப்பா இருக்கு.. ஒத்த ரூபா கூட போகாது.. எஸ்பிஐ உறுதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யெஸ் பேங்கில் டெபாசிட் செய்துள்ள, தங்களது பணம் திரும்ப கிடைக்குமா? என்பது தான்.

 

மத்திய வங்கியும் சரி, மத்திய நிதியமைச்சரும் வைப்பு நிதியாளர்கள் யாரும் கவலை பட வேண்டாம்.

உங்களது பணம் மிக பாதுகாப்பாக உள்ளது. யாரும் கவலைபட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

யெஸ் பேங்கில் டெபாசிட் தாரர்களுக்கு என்ன தான் சமாதானம் சொன்னாலும், அவர்களின் பணம் திரும்ப கிடைத்துவிடுமா? என்ற சந்தேகத்துடனே பலர் உள்ளனர். இது குறித்தான சந்தேகங்களை எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கேட்டபோது, தனது மருமகனுக்கும் அவ்வங்கியில் வங்கி கணக்கு இருப்பதாகவும், அதில் வைப்புத் தொகையும் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் கவலைபட வேண்டாம். உங்கள் பணம் ஆபத்தில் இல்லை என்று கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யெஸ் பேங்கில் ஸ்திரத்தன்மையை கொண்டு வாருங்கள்

யெஸ் பேங்கில் ஸ்திரத்தன்மையை கொண்டு வாருங்கள்

இது யெஸ் பேங்க் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்பு, ரஜ்னிஷ் குமார் கலந்து கொண்ட முதல் செய்தியாளர் சந்திப்பில் இப்படி கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தனது மருமகன் எஸ்பிஐ ஒரு தேசிய நிறுவனம். நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். மேலும் யெஸ் பேங்கின் அடுத்தடுத்த வளர்ச்சியினை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு வங்கியின் தோல்வி நிதி அமைப்புக்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. எஸ்பிஐ அதன் பின்னால் நிற்கிறது. ஆக ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டு வாருங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ரானா கபூர் வீட்டில் ரெய்டு
 

ரானா கபூர் வீட்டில் ரெய்டு

ரிசர்வ் வங்கி யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் பணம் எடுப்பதற்கும் சில வரம்புளை விதித்தது. இந்த நிலையில் தான் எஸ்பிஐயின் முன்னாள் தலைவர் பிரசாந்த் கிஷோரை நிர்வாகத்தினை கவனித்துக் கொள்ள நியமித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.

தவறு செய்தால் நிச்சயம் தண்டனை

தவறு செய்தால் நிச்சயம் தண்டனை

மேலும் அவரை கைது செய்து தற்போது விசாரனை நடத்தி வருகின்றனர். இது குறித்து குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, மக்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பது மிக அவசியம். ஆமாம் ரானா கபூர் ஒரு தனி மனிதர். அவர் தவறு தவறு செய்திருந்தால் நிச்சயம் அதற்குண்டான தண்டனையை அனுபவிப்பார்.

உங்கள் பணம் பத்திரமாக உள்ளது

உங்கள் பணம் பத்திரமாக உள்ளது

ஆனால் யெஸ் பேங்கினை மீட்பது அவசியம். ஏனெனில் அது ஒரு நிறுவனம். ஆக யெஸ் பேங்கின் மறுசீரமைப்பு திட்டதின் மூலம் 2,450 கோடி ரூபாய் ஆரம்ப கட்டமாக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். ஆக மக்கள் யாரும் அவர்களது வைப்பு நிதியை நினைத்து கவலை பட வேண்டாம். அது பத்திரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI chairman rajnish kumar said my nephew has account in yes bank, asked him not to worry

SBI chairman said that depositor’s money was not at risk at all, not to worry.
Story first published: Sunday, March 8, 2020, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X