மகாராஷ்டிராவில் பொய்நாட் என்ற ஒரு சிறிய கிராமத்தில் 70களில் மாவு ஆலையை நடத்தி வந்தவருக்கு மகளாக பிறந்தவர் ஷர்மிளா ஜெயின் ஓஸ்வால். இவர் அங்குள்ள மராத்தி நடுநிலை பள்ளியில் படித்தார். அப்போது பள்ளிதோழிகள் மற்றும் உறவினர்களிடமிருந்து துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறை பற்றிய அனுபவங்களை கேட்ட பிறகு, அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அது எளிதான ஒன்றாக அமையவில்லை.
ஏனென்றால் ஷர்மிளாவின் குடும்பம் ஆச்சாரமான ராஜஸ்தானி குடும்பத்தை சேர்ந்தது. பொதுவாக ஆச்சாரமான ராஜஸ்தானி குடும்பங்களில் பெண்களை உயர்கல்வியில் சேர்க்க விரும்பமாட்டார்கள், இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். இருப்பினும் ஷர்மிளா தனது உயர் கல்விக்காக போராடினார்.

அதிர்ஷ்டவசமாக, ஷர்மிளாவின் அப்பாவும், கணவரும் ஷர்மிளாவின் படிப்புக்கு முன்னுரிமை கொடுத்தனர். இதனையடுத்து இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு 1997 முதல் 1999 வரை பணிபுரிந்தார்.
பின்னர் கனடாவுக்கு சென்றார். அங்கு 2007 வரை வக்கீல் தொழில் செய்தார். அந்த கால கட்டத்தில் இந்தியாவில் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்தி ஷர்மிளாவுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 2004 முதல் 2006 வரையிலான காலத்தில் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. 2006ல் மட்டும் நாட்டில் 17,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். இதில் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 1,427 என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் தற்கொலை நிகழ்வு ஷர்மிளாவை மிகவும் பாதித்தது. இதனையடுத்து 2008ல் கனடாவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு புனேவுக்கு திரும்பினார். முதலில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு விவசாயிகளின பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனமான க்ரீன் எனர்ஜி பவுன்டேஷனை தொடங்கினார்.
இந்த அறக்கட்டளை நீர் ஆதாரங்களின் மறுமலர்ச்சி மற்றும் ஸ்மார்ட் விவசாய நுட்பங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதேநேரத்தில் விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பிறகு நபார்டு வங்கியின் ரூ.10 லட்சம் மானியத்துடன், மகாராஷ்டிராவின் புச்கேவாடியில் தனது முதல் நிலையான நீர் மேலாண்மை திட்டத்தை ஷர்மிளா தொடங்கினார். கோடை மாதங்களில் கூட தண்ணீரை பெறும் வகையில் தண்ணீர் பயன்பாட்டை ஒழுங்கமைத்து கிராம விவசாயிகளுக்கு உதவினார். மேலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் முழுவதும் தனது பணியை தொடர்ந்தார்.
ராஜஸ்தானின் துங்கர்பூரில் சோளம் மட்டுமே சாகுபடி செய்து வந்த விவசாயிகளை பல பயிர் சாகுபடிக்கு மாற உதவினார். சோளம் போன்ற பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவை எனவே குறைந்த தண்ணீரை பயன்படுத்தி பச்சை பயிறு போன்ற பயிர்களை எவ்வாறு பயிரிடுவது என்பதை விவசாயிகளுக்கு ஷர்மிளா கற்றுக் கொடுத்தார். மேலும் தண்ணீர் குறைவாக தேவைப்படும் தினைகளை பயிரிட விவசாயிகளுக்கு உதவினார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஐந்து மாநிலங்களில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை திட்டங்கள், சிறுதானியங்கள் மற்றும் காய்கறி சாகுபடி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் நிலையான வருமான வாய்ப்புகளை ஷர்மிளா ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் வீட்டில் இருந்தபோது, ஷர்மிளாவும், அவரது மகன் சுபம் ஓஸ்வாலும் சிறுதானியங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு தேர்வுகள் இல்லாதது குறித்து பேசினர். அப்போது சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. உடனே குட் மாம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினர்.
குட் மாம் நிறுவனம் சிறுதானியங்கள் நூடுல்ஸ், பாஸ்தா, பிஸ்கட் மற்றும் பலவற்றை தங்கள் இணையதளம் வாயிலாகவும், அமேசான் மற்றும் பிற சில்லரை விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது. இன்று இந்த ஸ்டார்ட்அப் ஆண்டுக்கு ரூ.16 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. மேலும் நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிறுதானிய விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
2021ல் ஆர்கானிக் பார்மிங் பிரிவில் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் என்ற விருதை குட் மாம் பெற்றது. 2022ல் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து போஷக் அனாஜ் விருதையும் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில், சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிப்பதில் ஷர்மிளா ஆற்றிய பணிக்காக அவரை பாராட்டி பேசினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications