தட தட சரிவில் தங்கம் விலை.. ஸ்டெடியாக நின்ற வெள்ளி விலை.. இனி என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு புறம் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தடதடவென சரிவில் காணப்படுகிறது.

 

ஆனால் அதே நேரம் வெள்ளியின் விலையானது ஸ்டெடியாக காணப்படுகிறது. அது ஏன் வாருங்கள் பார்க்கலாம்.

வெள்ளிக்கான தேவையானது தொழில் துறையில் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையானது இப்படி ஸ்டெடியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..!செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. இன்னும் குறையுமா..!

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

உண்மையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையினை போன்றே, வெள்ளியின் விலையும் இருந்து வந்தது. ஆனால் நேற்றோ தங்கம் விலையானது 10 கிராமுக்கு 22 கேரட் தங்கத்தின் விலையானது 1,730 ரூபாய் குறைந்துள்ளது. இதே தூய தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு 1,890 ரூபாய் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரம் வெள்ளியின் விலையானது நேற்று கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்தும் காணப்பட்டது.

வெள்ளி இறக்குமதி

வெள்ளி இறக்குமதி

இந்தியாவினை பொறுத்த வரையில் தங்கம் மற்றும் வெள்ளியானது அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் - செப்டம்பருக்கு இடையிலான காலகட்டத்தில் வெள்ளி இறக்குமதியானது 63.4% குறைந்து, 733.57 மில்லியன் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆக இதுவும் கூட வெள்ளியின் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

வெள்ளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்?
 

வெள்ளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்?

தங்கம் விலையானது செம சரிவில் இருக்கும் இந்த நேரத்தில், அதற்கு எதிர்மாறாக வெள்ளியின் விலை இருப்பதற்கு, ஒரு முக்கிய காரணம் தேவை அதிகரிப்பு. தங்கம் விலை குறைந்துள்ளது ஆனால் வெள்ளி விலை குறையவில்லையே ஏன்? நிபுணர்கள், தங்கம் வேறு. வெள்ளி வேறு. ஏனெனில் தங்கம் முதலீட்டு தேவைக்காகவும், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளி ஆபரணமாக பயன்படுத்தப்பட்டாலும், தொழில் துறையில் உபயோகப்படுத்தும் சிறந்த உலோகமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை குறையவில்லை.

அமெரிக்காவின் ஊக்கத் தொகை எதிர்ப்பார்ப்பு?

அமெரிக்காவின் ஊக்கத் தொகை எதிர்ப்பார்ப்பு?

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தினை விட வெள்ளியின் விலையானது சற்று ஸ்டெடியானதாகவே காணப்படுகிறது. அதோடு அமெரிக்கா அதிபர் தேர்தலும் சில வாரங்களில் வரவிருக்கும் நிலையில், ஊக்கத் தொகைக்கான இறுதி முடிவுகள் இதுவரையில் எட்டப்படவில்லை. ஆக இது தேர்தலுக்கு பின்பு இதுகுறித்த முடிவுகள் எட்டப்படலாம் என்றும் ஒரு தரப்பு கூறுகின்றது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படி?

வெள்ளி டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படி?

வெள்ளிக்கான பைவேட் பாயிண்ட் 61.007 ரூபாயாகும்.
இதே சப்போர்ட் லெவல்கள் - 60,349, 59,262, 57317
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,194, 62,852, 64,697
வெள்ளியினை பொறுத்தவரையில் எப்போதெல்லாம் சரியான வாய்ப்பு கிடைக்கிறதோ? அப்போதெல்லாம் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படி?

தங்கம் டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படி?

தங்கதிற்கான பைவேட் பாயிண்ட் 50,580 ரூபாயாகும்.
இதே சப்போர்ட் லெவல்கள் - 50,411, 50,111, 49,642
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,880, 51,049, 51,518

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் வெள்ளியின் விலையும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது வாங்கி வைக்கலாம்.

 

வெள்ளியில் முதலீடு

வெள்ளியில் முதலீடு

வெள்ளியே தங்கமோ எதுவாக இருந்தாலும், அதனை பிசிகலாக வாங்காமல், பேப்பர் தங்கம், வெள்ளியாக முதலீடு செய்வது சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எம்சிஎக்ஸ் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதோடு அதிகரித்து வரும் தொழில்சாலை உற்பத்தி காரணமாக, நீண்டகால நோக்கில் வெள்ளிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Silver and gold prices may rise in long term trend

Silver prices may steady amid strong demand
Story first published: Sunday, October 18, 2020, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X