இந்தியர்களுக்கு தங்க நகைகள் மீது இருக்கக்கூடிய மோகம் என்பது காலத்திற்கும் தீராத ஒன்றாக இருந்து வருகிறது. பணக்காரர்கள் தங்களுடைய அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காக தங்க நகைகளை பயன்படுத்துகிறார்கள். சாதாரண மக்களுக்கு தங்கத்தை வாங்கி வைத்தால் ஒரு அவசர காலத்திற்கு அடமானம் வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியாவில் வாங்கக்கூடிய ஒவ்வொரு தங்க நகைக்கும் ஒவ்வொரு நோக்கம் என்பது இருந்து வருகிறது.
இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப், கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் என பல்வேறு திட்டங்கள் வந்தாலும் தங்க நகைகளுக்கு நிகராக அவற்றுக்கான வரவேற்பு இல்லை. இந்நிலையில் தான் கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் தங்கம் என்பது உலகிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு உலோகம் . ஆனால் இந்தியர்கள் மட்டும் தான் தங்கத்தை நகையாக வாங்கி தங்களுடைய பணத்தை வீண் செய்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் தங்கம் தொடர்பான ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது . அதில் இந்தியர்கள் தங்கத்தை நகையாக வாங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்கத்தை நீங்கள் நகையாக வாங்கும்போதே பெரிய நஷ்டம் வந்து விடுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளது. தங்கத்தை இடிஎப் முறையிலும் நாணயம் அல்லது கட்டிகளாகவும் வாங்கும்போது மட்டுமே உங்களுக்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளது.
தங்கத்தை நகையாக வாங்கும் போது உங்களுக்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றிலேயே பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டு விடும் என சுட்டிக்காட்டி இருக்கிறது. தங்க நகையை விட கோல்டு ஈடிஎஃப், தங்க நாணயம் , தங்க கட்டிகள் ஆகியவற்றின் செயல் திறன் சிறப்பாக இருக்கிறது என கோடக்கின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் தங்கம் சேமிப்பு என்பது பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்க கூடிய தங்கம் பெரும்பாலும் நகை வடிவில் தான் உள்ளது. இந்த நகைகளும் நம் குடும்பங்கள் வசம் உள்ளன. வீடுகளிலும், வங்கி லாக்கர்களிலும் பல கோடி மதிப்புள்ள தங்க நகை இருக்கிறது. இது இந்திய குடும்பங்களின் பலம் என்றே கூறலாம். ஆனால் இனியாவது மக்கள் நகைகளை வாங்குவதை நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன?
தங்க நகை ஒரு போதும் முதலீடாகாது என்றும் தங்கத்தில் லாபம் பார்க்க தங்க நகை வாங்காமல், கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது தங்க நாணயம் வாங்கி வையுங்கள் என தெரிவித்துள்ளது. 2011ஆம் நிதியாண்டில் இருந்து 2026 ஆம் நிதியாண்டின் முதல் பாதி வரையிலான காலத்தில் தங்கத்தின் விலை ஆண்டுக்கு 12.5% என காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது ஆனால் நீங்கள் வாங்கிய தங்க நகையின் மதிப்பு 10% என்ற அளவில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது என கூறி இருக்கிறது . உலகிலேயே இந்தியா அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்கிறது. ஆனால் அந்த தங்கம் நகை வடிவில் வீடுகளில் இருக்கிறது, இது இந்தியாவிற்கு வர்த்தக பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?



Click it and Unblock the Notifications