கோடிங் மட்டும் போதாது பாஸ்: இது தெரியலனா ஐடி வேலை கிடைக்காது..!! கல்லூரி மாணவர்களே உஷார்..!!

இந்தியாவிலேயே அதிக அளவு மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கும் ஒரு மாநிலம் தமிழ்நாடு. ஆனால் தமிழ்நாட்டிலேயே தற்போது கல்லூரிகளில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் செம அடி வாங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக தமிழ்நாட்டு கல்லூரிகளில் ஐடி சார்ந்த கேம்பஸ் பிளேஸ்மெண்ட் அதிகமாகவே இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது குறைந்துள்ளது.

ஐடி துறை பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக புகுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்களில் புதிய பணியாளர்களை சேர்ப்பது (Fresher Hiring) 20% வரை குறைந்துள்ளது என மிர்ரர் நவ் செய்தி கூறுகிறது. அடிப்படை கோடிங் திறன்கள் மட்டுமே இனி வேலைவாய்ப்பை பெற்று தராது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோடிங் மட்டும் போதாது பாஸ்: இது தெரியலனா ஐடி வேலை கிடைக்காது..!! கல்லூரி மாணவர்களே உஷார்..!!

இனி வரும் காலங்களில் ஏஐ உருவாக்கும் கோடிங்கை சரிபார்க்கும் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட மாணவர்களையே நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என கல்வியாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடிங் எழுதுதல் மற்றும் சோதனை செய்தல் போன்ற பணிகளை நிறுவனங்கள் ஏஐ கருவிகள் மூலம் தானியங்கு முறைக்கு கொண்டு வந்துவிட்டன. எனவே முன்னணி ஐடி நிறுவனங்களில் புதிய ஃபிரெஷர்களுக்கான நியமனம் கடந்த ஆண்டை விட 20%-க்கும் மேல் குறைந்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் வரை மென்பொருள் மற்றும் பிராடெக்ட் மேம்பாட்டில் 498 மாணவர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 416ஆக குறைந்துவிட்டது. ஏஐ தாக்கத்தால் ஐடி நிறுவனங்களில் தொடக்க நிலை பணியிடங்கள் குறைந்துவிட்டன. எனவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களூக்கும் ஏஐ திறன்களை வழங்க திட்டமிட்டுள்ளோம் என அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read

ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் ஐடி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் கடந்த ஆண்டை விட 10% முதல் 15% வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவன துணைவேந்தர் மிர்ரர் நவ்வுக்கு அளித்துள்ள பேட்டியில் ஏஐ என்பது ஐடி வேலைகளை முற்றிலுமாக அழிப்பதல்ல; மாறாக பணிகளின் தன்மையை மாற்றியமைப்பது எனவே சிக்கலான அமைப்புகளை புரிந்துகொண்டு வணிக பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்ட பட்டதாரிகளையே நிறுவனங்கள் நாடுகின்றன என கூறுகிறார்.

Recommended For You

ஐடி நிறுவனங்களில் தொடக்க நிலை வேலைகள் மறைந்துவிடவில்லை ஆனால் தகுதி அளவுகோல் உயர்ந்துள்ளது. முன்பு மாணவர்களுக்கு பல மாதங்கள் பயிற்சி அளித்த பிறகே உண்மையான பணி வழங்கப்பட்டது, ஆனால் இன்று வேலைக்கு வந்த உடனே அவர்களிடம் உண்மையான வேலைகளை வாங்க வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏஐ திறன் ஐடி வேலைகளுக்கு மட்டுமானதல்ல மெக்கானிக்கல், சிவில் , எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்த மாணவர்களும், தனது துறையில் தேர்ச்சி பெற்று ஏஐ பயன்படுத்த தெரிந்திருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு என்ற நிலை வந்திருப்பதாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+